தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை காலை 10.31 மணிக்கு வெளியாகும் என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்
’பட்டாஸ்’ படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 16 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்
தனுஷ் நடிப்பில் துரைசந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் சினேகா கதாநாயகியாக நடித்துள்ளார் . புதுப்பேட்டை படத்திற்கு பின்னர் தனுஷூடன் சினேகா இந்த படத்தில்தான் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் படத்தை அடுத்து தனுஷின் இந்த படமும் வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது