சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை தொகையைவிட ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் உரிமை தொகை அதிகமான விற்பனையாகி உள்ளது தெரிந்துள்ளது
விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தற்போது தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது
தர்பார் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை விட ரூபாய் 10 கோடி அதிகம் ‘மாஸ்டர்’ படம் விற்பனையகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தின் நம்பர் ஒன் வியாபார நடிகராக இருந்து வரும் ரஜினியையே விஜய்யை முந்திவிட்டார் என்பதையே இந்த வியாபாரம் காட்டுகிறது என திரையுலக வட்டாரங்கள் கூறி வருகின்றன