பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது உச்சகட்டப் பரபரப்பையும் கலவரத்தையும் எட்டியுள்ளது. இந்த வார சண்டைகள் மற்றும் எல்லை மீறிய சர்ச்சைகள் குறித்து பார்ப்போம்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நிலவிய கலவரத்திற்கு காரணமானவர் கலையரசன்தான். ‘அகோரி’ என்று தன்னைத்தானே அழைத்து கொள்ளும் கலையரசன், இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தவர், திடீரென ஆக்ரோஷமடைந்துள்ளார்.
ஜூஸ் டாஸ்க்கில் ஏற்பட்ட குழப்பத்தால், கலையரசன் மேசைகள், நாற்காலிகள் உட்பட அங்கிருந்த பொருட்களை தூக்கிப் போட்டு உடைக்க ஆரம்பித்தார். இவ்வளவு நாளா என்ன நடந்துகிட்டு இருக்குன்னு நான் சர்வைலன்ஸ்ல பார்த்துக்கிட்டு இருந்தேன். இனிமே நான் சார்ஜ் எடுத்துக்கிறேன்” என்று பேசுவது போல, அவர் வன்முறையை கிளப்பினார்.
அவர் ஆவேசத்தின் தொடர்ச்சியாக, இந்த வாரத் தலைவர் கனியும், “சட்டம் தவறாகும் போது வன்முறை வெடிக்கும்” என்று பேசி, கலையரசனின் செயலுக்கு ஆதரவாக களமிறங்கினார்.
இந்த வன்முறைக்கு அடிப்படைக் காரணம் ஜூஸ் டாஸ்க்தான். போட்டியாளர்கள் தயாரிக்கும் ஜூஸை, குவாலிட்டி டீமில் இருக்கும் பார்வதி மற்றும் திவாகர் ஆகியோர் அங்கீகரிக்க வேண்டும்.
பார்வதியும் திவாகரும் ஜூஸ் தரமாக இல்லை என்று கூறி நிராகரித்தபோது, ஆதிரை கோபத்தில் ஜூஸ் பாட்டில்களை தூக்கி போட்டு உடைத்தார்.
பார்வதி மற்றும் திவாகர் இடையே சில மணி நேரங்களுக்குள்ளேயே பெரிய சண்டை மூண்டது. திவாகர் ஏதோ சலுகை பெறுவதாகவும், அதனால் தன்னிடம் அதிகமாக பேசுவதாகவும் பார்வதி கத்தினார். அதற்குத் திவாகரும் “ஓவரா சீன் போடாதே” என்று பதில் கத்தி, நட்பு முறிந்தது.
வீட்டில் சண்டை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, சில ஜோடிகள் எல்லை மீறிய பழக்கவழக்கங்களில் ஈடுபட்டு, டாஸ்க்குகளை விட அதிக கவனம் ஈர்க்கின்றனர்.
ஆதிரை மற்றும் எஃப்ஜே ஆகியோர் பகிரங்கமாக சில்மிஷங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதிரை இவருடன் நெருக்கமாக பழகுவதும், எஃப்ஜே ஆதிரையை தூக்கி அணைத்து கட்டிப்பிடிப்பதும் அரங்கேறியது.
சில போட்டியாளர்கள் பேசும் வசனங்கள் ’18+ கன்டென்ட்’ காரணமாக, பிக் பாஸ் வீட்டில் நடக்கும் முக்கிய டாஸ்க்குகளை விட்டுவிட்டு, மக்கள் கவனத்தை திசை திருப்புவதாக விமர்சனங்கள் எழுகின்றன.
கலையரசனை விட, பெண்களிடம் அத்துமீறும் வகையில் நடந்து கொள்ளும் திவாகர் குறித்து கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. திவாகர் ஆரம்பம் முதலே பெண்களிடம் சில்மிஷங்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெளியேறிய அப்சரா உட்பட பல பெண்களை மோந்து பார்த்தல், முத்தம் கேட்டல், திருமணம் செய்துகொள்வது குறித்து கேட்டது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இதையெல்லாம் விட, இன்று காலையில் அவர் தெரியாமல் ஒரு பெண் இருந்த கழிவறைக்குள் நுழைந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தகவல் பரவுகிறது. இந்த சம்பவம் குறித்து, வினோத் மற்றும் கமருதீன் இருவரும் தனியாக அமர்ந்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
திவாகர் மீதான இந்த அத்துமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்தால், அவர் மீது பெண்கள் அனைவரும் இணைந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், வார இறுதியில் திவாகர் ரெட் கார்டு வாங்கி வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
கலையரசன் கோபப்பட்டு பொருட்களை உடைப்பது ஒருபுறம் இருந்தாலும், திவாகர் பெண்களிடம் அத்துமீறுவது ஏற்க முடியாத செயல் என்றும், இவருக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களின் மனநிலை கேள்விக்குரியது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
