நால்வரில் குழந்தைக்கு அப்பா யார்..? கிளைமாக்ஸில் காத்திருந்த ட்விஸ்ட்… அப்பவே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த பருவகாலம்..!!

By Bala Siva

Published:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பல திரைப்படங்களில் நடித்த ரோஜா ரமணி முக்கிய கேரக்டரில் நடித்த திரைப்படம் தான் பருவ காலம். கடந்த 70கள் முடிவில், 80களில் சிவாஜி, கமல், ரஜினி என நாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் படம் வெளிவந்து கொண்டிருந்தது.

ஆனால் மிகவும் அரிதாக முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு திரைப்படம் வெளிவந்தது என்றால் அது ரோஜா ரமணி நடித்த பருவகாலம் திரைப்படம் தான். இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தின் கதையின் படி ஆனந்த பவன் என்ற பங்களாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் சீசனின் போது அதாவது பருவ காலத்தின் போது பணக்காரர்கள் வந்து தங்குவது உண்டு.

அந்த பங்களாவில் எஸ்வி சுப்பையா மற்றும் அவரது மகள் ரோஜா ரமணி ஆகியோர் வேலை பார்ப்பார்கள். இந்த நிலையில் ஒரு ஆண்டு பருவ காலம் வந்தபோது அந்த பங்களாவுக்கு ஆறு பேர் வருவார்கள். ஓவியர் சுதர்சன், வேட்டைக்காரர் சசிகுமார், கொலைகாரர் ஸ்ரீகாந்த், குதிரை பயிற்சியாளர் லியோ பிரபு மற்றும் பெண் விருந்தினர் பிரமிளா வருவார்கள்.

3 படங்கள் நடித்தும் பிரபலமாகாத நடிகை… சிவாஜியுடன் இணைந்ததும் குவிந்த ரசிகர்கள்… பத்மப்பிரியாவின் திரை பயணம்..!!

இதில் ஸ்ரீகாந்த் சகோதரர் கமல்ஹாசனும் வந்திருப்பார். இந்த நிலையில் அந்த விடுதியில் உள்ள ஒவ்வொரு அறைக்கும் ரோஜா ரமணி சின்ன சின்ன உதவிகள் செய்து வருவார். கிட்டத்தட்ட ரூம்பாய் பணியை பார்த்து வருவார். அந்த வகையில் தான் திடீரென ஒரு நாள் அவர் மர்மமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவார்.

images 43

அப்பாவி பெண்ணான அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது யார் என்று தெரியாமல் இருப்பார். இந்த நிலையில் திடீரென ரோஜா ரமணி கர்ப்பமாகி குழந்தையும் பெற்றுவிடுவார். அந்த குழந்தைக்கு யார் தந்தை? அவரை பாலியல் பலாத்காரம் செய்தது யார் என தந்தை எஸ்வி சுப்பையா துப்பறிவது தான் கதை.

ரோஜா ரமணி குழந்தையின் தந்தை யார் என்பது கிளைமாக்ஸ்சில் தெரிய வரும்போது பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும். 1972 ஆம் ஆண்டு செம்பருத்தி என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த படம். தமிழ் மலையாளம் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இந்த படம் உருவானது.

நடிகையர் திலகம் சாவித்திரி… 19 மாதங்கள் கோமாவில்… உதவ ஆளின்றி தவித்த இறுதிக்காலம்…!!

மூன்று மொழிகளிலும் ரோஜா ரமணி தான் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நாகேஷ், தேவிகா, சச்சு, சுருளிராஜன் உள்பட பலர் நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு தேவராஜன் என்பவர் இசையமைத்திருப்பார். இந்த படம் கடந்த 1974 ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி வெளியானது.

முழுக்க முழுக்க ரோஜா ரமணியின்  நடிப்புக்காகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் நாயகி ரோஜா ரமணியின் மகன் தான் தற்போது பிரபல தெலுங்கு நடிகராக இருக்கும் தருண். மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி ஒரு சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் இவர் நடித்திருப்பார்.

ஜாக்கிசான், கமல்ஹாசனுடன் நடித்த நடிகை.. சொந்தமாக உழைத்து 100 கோடிக்கும் மேல் சம்பாதித்தவர்..!

அதேபோல் இந்த படத்தில் நடித்த சசிகுமாரின் மகன் விஜய் சாரதி என்பவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.