கமலுக்கும், ரஜினிக்கும் என்ன வித்தியாசம்? பார்த்திபன் சொன்ன ‘நச்’ பதில்

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒரு அந்திமழை டிவி என்ற யூடியூப் சேனலில் பிரத்யேகமாகப் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க. கமல் சாருக்கும், ரஜினி சாருக்கும் இருக்குற வித்தியாசம்…

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ஒரு அந்திமழை டிவி என்ற யூடியூப் சேனலில் பிரத்யேகமாகப் பேட்டி கொடுத்துள்ளார். அப்போது பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.

கமல் சாருக்கும், ரஜினி சாருக்கும் இருக்குற வித்தியாசம் அதுதான். கமல் சார் வந்து தனக்கு என்ன நாலெட்ஜ் இருக்கோ அதை சினிமாவுல செய்யணும்னு ஆசைப்படுவாரு. ரஜினி சார் தனக்கு எவ்வளவு தெரிஞ்சாலும் இந்த கமர்ஷியல் சினிமா சினிமாதான். சினிமாவுல இவ்வளவு இருந்தா போதும் ஜனங்களுக்கு என்பதில் அவர் கிளியரா இருப்பாரு.

நான் வந்து குடைக்குள் மழை என்ற படம்லாம் வரும்போது நம்ம ஊரையும் தாண்டி ஜெர்மனியில போய் ரசிக்கப் போறாங்க. வெலிங்டனிலும், சித்ரா தியேட்டர்லயும் 100 நாள் ஓடுனதை எல்லாம் தாண்டி அது எங்கெல்லாம் போனா நமக்கு சந்தோஷம் கொடுக்குமோ அதுதான். அப்படித்தான் எனக்கு குடைக்குள் மழையில் கிடைச்ச நிறைய அங்கீகாரம். ஒத்த செருப்பு படத்துல ஒரே கேரக்டர்தான் படம் முழுக்க வருது.

ஆனா எல்லா அம்சங்களும் வருது. இப்ப அந்தப் படத்தை ரசிக்கிறாங்க. இன்னும் 10 வருஷம் கழிச்சி அந்தப் படம் பேசப்படலாம். இது என்னோட பேராசைன்னு கூட சொல்லலாம். இப்ப அந்தப் படத்தை ஹாலிவுட்ல பண்றதுக்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கு. நான் குடும்பம் அமைச்சிக்கிட்டதால தான் முன்னேற முடியலன்னு சொல்றதையே சொல்ல விரும்பல. சொல்ல விரும்பலங்கறதையே நான் சொல்ல விரும்பல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.