பார்த்திபனோட அந்த படம் மட்டும் இன்னைக்கு வந்து இருந்தா!.. ட்ரெண்ட் செட்டரே இவர்தான்!..

By Sathish

Published:

ஹவுஸ்ஃபுல்: 1999 ஆம் ஆண்டு பார்த்திபன் நடித்து இயக்கி வெளிவந்த திரைப்படம் தான் ”ஹவுஸ்ஃபுல்” இப்படத்தில் விக்ரம்,ரோஜா,சுவலட்சுமி இவர்களுடன் பார்த்திபனும் நடித்திருப்பார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருப்பார். இப்படத்தின் கதைப்படி ஒரு திரையரங்கு உரிமையாளராக பார்த்திபன் நடித்திருப்பார்.

படத்தின் ஆரம்பக் காட்சியில் மக்கள் அனைவரும் ஆரவாரமாக திரண்டு வந்து படம் பார்க்க திரையரங்கிற்குள் செல்கிறார்கள். பின்னர் சிறிது நேரம் கழித்து படம் ஆரம்பம் ஆகிறது. அப்போதுதான் ஒரு விஷயம் தெரிய வருகிறது. அந்த திரை அரங்கத்திற்குள்ளே தீவிரவாதிகள் பல இடங்களில் வெடிகுண்டுகள் வைத்திருக்கிறார்கள் என்று. இது பற்றி காவல் துறை அதிகாரிகளுக்கும் தெரிய வருகிறது.

பின்னர் இந்த விஷயத்தை படம் பார்க்கும் மக்களிடம் நேரடியாக கூறினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் மேலும் வெடிகுண்டு கண்டுபிடிக்க முடியாது. இதனால் காவல்துறை புத்திசாலித்தனமாக வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு சாமர்த்தியம் மக்களை வெளியேற்றுகின்றனர். வெடிகுண்டை கண்டுபிடித்து அனைவரையும் காப்பாற்றினார்களா..? இல்லையா..? என்பதை படத்தின் இறுதி காட்சி வரை சஸ்பென்சராக எடுத்திருப்பார் பார்த்திபன். விக்ரம்,சுவலட்சுமி,ரோஜா,ஐஸ்வர்யா என அனைவரும் படத்தில் தங்களின் பங்களிப்பை சிறப்பாக செய்திருப்பார்கள்.

அந்த சமயத்தில் இந்த படத்தை பல பத்திரிக்கையாளர்கள் பாராட்டி கொட்டி தீர்த்தனர். அது மட்டும் இன்றி இந்தப் படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதுகளையும் பெற்றது. இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டும் இன்றி பல விருதுகளையும் வென்று குவித்தது. ஆனால் வசூலில் கோட்டை விட்டது. எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதால் இப்படம் தோல்வி படமாக அமைந்தது. திரில்லர் படங்களின் வரவேற்பு 99 காலங்களில் மக்களிடம் பெரிதாக எடுபடவில்லை என்றே பார்க்கப்படுகிறது.

அன்று மட்டும் அந்தப் படம் வெற்றியடைந்திருந்தால் தமிழ் சினிமாவின் போக்கே வேற மாதிரி அமைந்திருக்கும். ஒருவேளை இந்த காலங்களில் ஹவுஸ்ஃபுல் படம் வெளியாய் இருந்தால் தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட் இயக்குனராக வலம் வந்திருப்பார் பார்த்திபன். இதற்கு தகுந்த உதாரணம் அவர் இயக்கி நடித்த ”ஒத்த செருப்பு சைஸ் ஏழு” திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியாகி அதில் 100 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.