ஒரு பெண் கேரக்டர், ஐந்து ஆண் நண்பர்கள் கேரக்டர் என்றால் உடனே கிட்டத்தட்ட அனைவருக்கும் ஞாபகம் வருவது புது வசந்தம் திரைப்படம்தான். விக்ரமன் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் திரை உலகில் ஒரு புரட்சிகரமான படம் என்றும் கூறப்பட்டது.
ஆனால் கடந்த 1981ஆம் ஆண்டு ஐந்து இளைஞர்கள் மற்றும் ஒரு பெண் தோழி என ஒரு காவியமான திரைப்படம் வந்திருக்கிறது என்றால் அது பாலைவனைச் சோலை திரைப்படம் தான்.
அவள் ஒரு தொடர்கதை படத்தை மீண்டும் இயக்கினாரா கே.பாலசந்தர்? மனதில் உறுதி வேண்டும் பெற்ற விமர்சனம்..!
ஒரு தலை ராகம் என்ற திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றிய இரட்டையர்கள் ராபர்ட், ராஜசேகரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பாலைவன சோலை.
கடந்த எண்பதுகளில் ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் ஏற்படும் காதல், வில்லன், ஸ்டண்ட் காட்சிகள், டூயட் பாடல், காமெடி என ஒரே மாதிரியான படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் ஒரு வித்தியாசமான திரைக்கதை அம்சம் கொண்ட படம் வந்தது என்றால் அது பாலைவனச் சோலை படம்தான்.
குறிப்பாக இந்த படத்தில் ஹீரோவே இல்லை என்பதும் மரபை உடைத்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு தேடல்களுக்காக சென்னைக்கு வரும் ஐந்து இளைஞர்கள் மத்தியில் உள்ள சோகம் மற்றும் காமெடிதான் இந்த படத்தின் கதை.
சமூகத்தின் மீது வெறுப்பு கொண்ட இளைஞன் சந்திரசேகர், பல இன்டர்வியூக்கள் அட்டென்ட் செய்தும் வேலை கிடைக்காத ஜனகராஜ், பணக்காரனாக இருந்தாலும் பாசத்திற்காக ஏங்கும் ராஜீவ், சினிமாக்கனவுடன் சென்னை வந்திருக்கும் தியாகு மற்றும் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக பணம் சேர்க்க சென்னை வந்திருக்கும் கைலாஷ்நாத் என்ற ஐந்து கேரக்டர்கள் தான் இந்த படத்தின் மையப் புள்ளி.
இதில் யார் ஹீரோ என்பதற்கான பேச்சே கிடையாது. அனைவருக்குமே சம பங்களிப்பை இயக்குனர்கள் கொடுத்திருப்பார்கள். இந்த ஐவரும் தங்களுடைய பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் குட்டிச்சுவரில் உட்கார்ந்து காமெடியாக பேசுவதும் அங்கு வரும் பெண்களை கிண்டல் அடிப்பதும் என இளம் வயதுதிற்கு உரிய கேரக்டரை கொண்டு இருப்பார்கள்.
அப்போதுதான் இவர்களுடைய எதிர்த்த வீட்டிற்கு சுகாசினி குடி வருவார். அவரையும் இந்த கும்பல் கிண்டல் செய்யும் போது அந்த காலத்து கதாநாயகிகள் போல் தோழிகளிடம் புகார் சொல்லாமல் அல்லது தனியாக அழுகாமல், கிண்டல் செய்தவனை அழுத்தமாக எதிர்கொள்ளும் ஒரு கேரக்டரில் நடித்திருப்பார்.
அவரது அறிமுக காட்சியே படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்க வைக்கும். இந்த ஐந்து ஆண் கேரக்டர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்னணியை கூறி அவர்களுடைய சோகத்தையும் மிக அருமையாக விளக்கி இருப்பார்கள் இயக்குனர்கள்.
வில்லன் நடிகரை திருமணம் செய்த காமெடி நடிகை லலிதா குமாரி.. விவாகரத்து பின்னும் தைரியமான முடிவு..!
இவர்களுடைய பொறுப்பில்லாத தனத்தை சுட்டிக்காட்டி அவர்களை ஒரு உன்னத இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் சுகாசினி முயற்சிப்பார். அதில் கிட்டத்தட்ட வெற்றி அடைவார். ஒரு கட்டத்தில் சந்திரசேகர் மட்டும் ஒருதலையாக சுகாசினியை காதலிப்பதாக சொல்ல, அப்போதுதான் அவர் தனக்கு இதய நோய் இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் தான் இறந்து விடுவேன் என்ற உண்மையை சொல்ல அதன் பிறகு பெரும் சோகத்துடன் இந்த கதை நகரும்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோர் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்த நிலையில் சங்கர்-கணேஷ் இந்த படத்துக்கு இசையமைத்து அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்கி இருந்தார்கள். ‘எங்கள் கதை’, ‘பௌர்ணமி நேரம்’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்றால் இன்று வரை மக்கள் மனதில் குடியிருக்கும் ஒரு பாடல் தான் வாணி ஜெயராம் பாடிய ‘மேகமே மேகமே’ என்ற பாடல். இந்த படத்தில் இடம் பெற்ற நான்கு பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியது மட்டுமின்றி பின்னணி இசையும் பெரிதாக பேசப்பட்டது.
இந்த படத்தின் தயாரிப்பாளரிடம் பொருளாதாரரீதியாக இந்த படத்தை தன்னால் முழுமையாக தயாரிக்க முடியுமா என்ற அச்சம் இருந்தபோது அவருக்கு இயக்குனர்கள் ராபர்ட் ராஜசேகர் தான் தைரியம் கொடுத்து படத்தை தயாரிக்க வைத்தனர்.
ஒரு பெரிய தயாரிப்பாளர் என்றால் தங்களுடைய படைப்புத்திறனுக்கு பிரச்சனை வரும் என்பதால் சிறிய தயாரிப்பாளரை இவர்களாக தான் விரும்பி சென்று தேர்வு செய்தனர்.
வெறும் 2500 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் அட்வான்ஸ் கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட படம்தான் பாலைவனச் சோலை. அதன்பிறகு கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் இந்த படத்திற்கு பைனான்ஸ் செய்ய உதவியதாகவும் அதன் பிறகு தான் படிப்படியாக இந்த படம் வளர்ந்தது என்று கூறப்படுவதுண்டு.
காதல் கோட்டை ஹீரா வாழ்க்கை அனுபவங்கள்.. இப்போது என்ன செய்கிறார்..?
மொத்தத்தில் கடந்த 80களில் தமிழ் சினிமாவின் மரபை உடைத்து, இன்று வரை ஒரு காவிய திரைப்படமாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறது பாலைவன சோலை திரைப்படம்.