அந்தக் காலத்திலேயே சொந்த ஹெலிகாப்டர் வைந்திருந்த அம்மன் படங்களின் நாயகி

தமிழ் சினிமாவில் அம்மன் வேடங்கள் என்றால் இன்று ரம்யா கிருஷ்ணண் ஞாபகம் வருவது போல் பழைய திரைப்படங்களில் அம்மனாக வந்து பெண் இரசிகர்களை சாமியாட வைத்தவர் புன்னகை அரசி கே.ஆர். விஜயா.

வறுமையான குடும்பத்தில் பிறந்து, பிழைப்புக்காக நாடகங்களில் நடித்து, தற்செயலாக திரையுலகில் நுழைந்து, பின் தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையான கே.ஆர்.விஜயா செய்துள்ள சாதனைகளை, இதர தமிழ்நடிகைகளால் இன்றளவும் முறியடிக்க இயலவில்லை.

இன்று ஒவ்வொரு நடிகருக்கும் அவரின் படங்களின் எண்ணிக்கையை தலைப்பாக வைத்து பேசி வருகிறோம். ஆனால் கே. ஆர். விஜயாவோ தமிழில் அதிகப் படங்களில் நாயகியாக நடித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். திருமணத்திற்குப் பின் நடிப்புக்கு முழுக்குப் போடும் நடிகைகளுக்கு மத்தில் தனது புகழ் குறையாமல் தொடர்ந்து நடித்தவர்.

மேலும் இன்று லேடீ சூப்பர் ஸ்டார் நயன்தாரா சொந்தமாக பிளைட் வைத்திருப்பது போன்று, அந்தக் காலத்திலேயே கே.ஆர்.விஜயா சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்தார் என்றால் அவரின் புகழை பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஆடம்பர பங்களா, சொகுசு கார்கள், குதிரை வளர்ப்பு என ஆடம்பரத்தில் ஜொலித்த நடிகையும் இவரே.

மன்சூர் அலி கான் பேச்சுக்கு த்ரிஷா பதிலடி.. மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ், அர்ச்சனா கல்பாத்தி கண்டனம்!

இவரின் நூறாவது படமான “நத்தையில் முத்து” வெற்றியைத் சொந்த செலவில் விழாவெடுத்துக் கொண்டாடிய முதல் தமிழ் நடிகை. அதில் எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இப்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களைப் போல அந்தக் காலத்திலேயே தமிழ்ப்பட நடிகையருள், நாயகியைப் பிரதானமாகக் கொண்ட கதையம்சமுள்ள படங்களில், முதன்முதலில் அதிகளவில் நடித்த தமிழ் நடிகையும் கே.ஆர்.விஜயாதான். அவற்றில் சபதம், வாயாடி, திருடி, ரோஷக்காரி, மேயர் மீனாட்சி, அன்னை அபிராமி போன்ற படங்கள் உதாரணம்.

முதல்நிலை நாயகியாக பிரபலமாக பல படங்களில் நடித்த காலகட்டத்திலேயே, இரண்டாம்நிலை நாயகியாகவும், நடித்தவர். தன் கதாபாத்திரம் பிடித்துவிட்டால் போதும் படத்தில் நடித்துவிடுவார். இப்படி நடித்தால் தன்இமேஜ் பாதிக்குமே என்றெல்லாம் ஒருபோதும் கவலைப்படாதவர்.

பின்னாளில் தனது கணவருக்கு மூன்றாம் தாரமாக மணமுடித்தாலும் கண்ணியமான வாழ்க்கையை நடத்தியவர்.  திருமணத்திற்குப் பிறகு நடிக்க வாய்ப்பு வந்தும், மறுத்து, படங்களில் தொடர்ந்து நடிக்க கணவருடைய முழு ஆதரவும், ஊக்கமும் கிடைத்தபின்னரே நடிக்க வந்தவர்.

இவ்வாறு தமிழ் சினிமா உலகில் ஒரு பொக்கிஷமாகவே திகழ்ந்து வருகிறார் கே.ஆர். விஜயா.