மன்சூர் அலி கான் பேச்சுக்கு த்ரிஷா பதிலடி.. மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ், அர்ச்சனா கல்பாத்தி கண்டனம்!

சினிமாவில் பலாத்கார காட்சிகளில் நடிப்பதை பெருமையாக சொல்லி வரும் மன்சூர் அலிகான் அதேபோல ஒரு காட்சி லியோ படத்தில் த்ரிஷாவுடன் தனக்கு கிடைக்கவில்லையே என ஃபீல் பண்ணி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குஷ்பூ, ரோஜா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரை பலவந்தப் படுத்தும் காட்சிகளில் கட்டில் மேல் தூக்கி போட்டு நடித்துள்ளேன். ஆனால், தற்போதைய இயக்குனர்கள் அப்படி எல்லாம் சீல் வைக்க மாட்டேன் எனக் கூறுகின்றனர் எனக் கொச்சையாக மன்சூர் அலிகான் பேசிய நிலையில், அந்த வீடியோ வைரல் ஆனது.

மன்சூர் அலி கானுக்கு திரையுலகம் கண்டனம்

அதனைப் பார்த்து நடிகை திரிஷா, இதற்கு மேலும் சும்மா இருக்க முடியாது என நினைத்து, மன்சூர் அலிகான் பேசியது அபத்தமாகவும் சொல்ல முடியாத அளவுக்கு கேவலமாகவும் உள்ளதாக நடிகை திரிஷா ஆவேசப்பட்டு ட்வீட் போட்டு இருந்தார். மன்சூர் அலிகான் நினைப்பது போல ஒரு சீனில் நான் எப்போதும் நடிக்க மாட்டேன் என்றும் அவருடன் இணைந்து நடிக்கப் போவதில்லை என்றும் அதிரடியாக பதிவிட்டுள்ளார்.

நடிகை திரிஷா வெளிப்படையாக மன்சூர் அலிகானை எதிர்த்து பேசிய நிலையில், மாளவிகா மோகனன் திரிஷாவுக்கு ஆதரவாக ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். எப்படி நடிகைகளைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு நடிகர் பேச முடியும் எனக் கொந்தளித்து இருந்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகான் பேசியதற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன். ஒரே படத்தில் ஒன்றாக ஒரே குழுவாக நடித்த நிலையில், எப்படி நடிகை திரிஷாவை பற்றி இவ்வளவு மோசமாக பேச முடியும் என கேள்வி எழுப்பி விளாசி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.

மேலும் பாடகி சின்மயி, மன்சூர் அலிகான் மட்டுமின்றி ரோபோ சங்கர், ராதா ரவி, கூல் சுரேஷ் என பல நடிகர்களும் இப்படித்தான் பெண்களை இழிவுபடுத்தி பேசி வருகின்றனர். மேலும் அதனை ஒரு கெத்தாக, நடிகையால் என்ன செய்துவிட முடியும் என்கிற அலட்சியப் போக்காலும் தொடர்ந்து இப்படி பேசி அடுத்தடுத்த படங்களிலும் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகின்றனர் என வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில், தளபதி 68 படத்தை தயாரித்து வரும் அர்ச்சனா கல்பாத்தியும் மன்சூர் அலிகானின் மோசமான பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். சினிமாவில் இருந்து கொண்டு நடிகைகள் பற்றி படு மோசமாக சித்தரித்து எப்படித்தான் பேச முடிகிறதோ என்று தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒட்டுமொத்த திரையுலகமும் தற்போது மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிராக கொந்தளித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறது. நடிகர் மன்சூர் அலிகானை எந்த ஒரு படத்திலும் இனிமேல் கமிட் செய்யக்கூடாது என்றும் அவருக்கு தக்க தண்டனையை சினிமா துறையில் இருப்பவர்கள் கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்களும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Screenshot 2023 11 19 080016

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews