விஜயகாந்த் நடிப்பில் ஆபாவாணன் தயாரிப்பில் அரவிந்தராஜ் இயக்கத்தில் உருவான ஊமை விழிகள் என்ற திரைப்படத்தில் வரும் திகில் பாட்டியை யாரும் மறந்திருக்க முடியாது. பல திரைப்படங்களில் அம்மா, பாட்டி வேடங்களில் நடித்த இவரது பெயர் எஸ்.ஆர்.ஜானகி. இவர் நாடகத்தில் ஹீரோவாக ஆண் வேடத்தில் நடித்துள்ளார் என்பது ஆச்சரியமான தகவலாகும். சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் எஸ்ஆர் ஜானகி.
சிறுவயதிலேயே இவர் கலையில் ஆர்வம் இருந்த காரணத்தினால் பள்ளி படிப்பை விட தெருக்கூத்து கலை நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். சிறு வயதிலேயே பாய்ஸ் நாடக குழுவில் இணைந்தார். அவரது அபாரமான குரல் மற்றும் தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பு நாடக உலகில் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
செய்தி வாசிப்பாளர் முதல் நடிகை வரை.. பாத்திமா பாபுவின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்..!
குறிப்பாக பல நாடகங்களில் அவர் ஹீரோவாக அதாவது ஆண் வேடத்தில் நடித்தார். ஒரு பெண் கலைஞர் ஆண் வேடத்தில் நடித்ததை பார்வையாளர்களால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவர் தத்ரூபமாக நடித்தார். இந்த நிலையில் நாடகத்திலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் 1935 ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பியு சின்னப்பா தேவர் உள்பட பல பிரபல நடிகர்களுடன் அவர் நாயகியாக நடித்த நிலையில் ஒரு கட்டத்தில் அம்மா வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் பாட்டி வேடத்திலும் நடித்துள்ளார். அவர் ஏழை படும் பாடு, சர்வாதிகாரி, என் தங்கை, கலையரசி, ரத்தக்கண்ணீர், கப்பலோட்டிய தமிழன், பாகப்பிரிவினை, பார் மகளே பார், வானம்பாடி, நடு இரவில், வந்தாளே மகராசி, சிவப்பு நிலா, வாழையடி வாழை என பல திரைப்படங்களில் நடித்தார்.
பெரும்பாலான எம்ஜிஆர் சிவாஜி படங்களில் அவர் அம்மாவாக நடித்துள்ளார். பல திரைப்படங்களில் மாமியார் பாட்டி என வயதான கேரக்டரில் நடித்திருந்தார். இளம் வயதிலேயே தனது கணவரை இழந்த அவர் தனது குழந்தைகளுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். நல்ல வருமானம் வந்தபோதிலும் அவர் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபடவில்லை. குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தார்.
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை.. கடைசி காலத்தில் வறுமை.. நடிகை பிந்துகோஷ் கதை..!
அவரது கலை சேவையை பாராட்டி கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. ஊமை விழிகள் திரைப்படத்தில் எஸ்ஆர் ஜானகி, ரவிச்சந்திரன் அம்மாவாக வந்து திகிலான கேரக்டரில் நடித்திருப்பார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களை மிரட்டும் வகையில் இருக்கும். பல திரைப்படங்களில் அம்மா என்ற கருணையான வேடத்தில் நடித்தவரா இப்படி ஒரு திகிலான வேடத்தில் நடித்தவர் என்ற ஆச்சரியம் பலருக்கு ஏற்பட்டது.