செய்தி வாசிப்பாளர் முதல் நடிகை வரை.. பாத்திமா பாபுவின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன் பின் சினிமாவில் பல படங்களில் நடித்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் தான் நடிகை பாத்திமா பாபு.

தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்களில் பிரபலமாக இருந்தவர்களில் ஒருவர் பாத்திமா பாபு. இவர் செய்தி வாசிக்க வருகிறார் என்றால் அவர் என்ன காஸ்டியூம் அணிந்திருக்கிறார்? என்ன தோடு அணிந்திருக்கிறார்? என்பதை பார்ப்பதற்காகவே பலர் செய்தியை பார்ப்பது உண்டு.

4 தேசிய விருதுகள்.. இளையராஜா – கே.பாலசந்தர் கூட்டணி.. சித்ராவின் அறிமுகம்.. பல அற்புதங்கள் செய்த சிந்து பைரவி..!

செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர். அவர் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தூர்தர்ஷனின் தமிழ் சேனலான பொதிகையில் செய்தி வாசித்துள்ளார். அதன் பிறகு ஜெயா டிவியில் செய்தி வாசித்தார். செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.

fathima 1

இந்த நிலையில் தான் அவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவரை திரையில் அறிமுகப்படுத்தியவர் கே.பாலச்சந்தர் தான். அவர் தனது ‘கல்கி’ திரைப்படத்தில் பாத்திமா பாபுவுக்கு கோகிலா என்ற அழுத்தமான கேரக்டரை கொடுத்தார். முதல் படத்திலேயே தன்னை மெருகேற்றி கொள்ள அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

‘கல்கி’ படத்தின் வெற்றி காரணமாக அவருக்கு அடுத்தடுத்து குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக ராஜ்கிரண், மீனா நடித்த ‘பாசமுள்ள பாண்டியரே’, பிரபுதேவா, அப்பாஸ் நடித்த ‘விஐபி’, விஜய், சூர்யா நடித்த ‘நேருக்கு நேர்’ உள்பட பல படங்களில் அவர் அம்மா கேரக்டரில் நடித்தார்.

சிவாஜியை வைத்து எடுத்த ஒரே படம்.. இனிமேல் பெரிய நடிகர்களே வேண்டாம் என முடிவு செய்த கே.பாலசந்தர்..!

மேலும் ‘சொல்லாமலே’, ‘சிம்ம ராசி’, ‘கல்யாண கலாட்டா’, ‘நீ வருவாய் என’ ஆகிய படங்களில் நடித்த பாத்திமா பாபு, ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த ‘முதல்வன்’ திரைப்படத்தில் ரகுவரனின் மனைவியாக நடித்திருந்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில் அம்மா வேடத்தில் நடித்து வந்தார். 2000 ஆண்டு முதல் 2010 வரை ஏராளமான படங்களில் நடித்தார்.

fathima

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். மேலும் பொதிகையில் ஒளிபரப்பான ‘சித்திரப்பாவை’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தவர், அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிலா பூக்கள், சன் டிவியில் ஒளிபரப்பான காவிரி, லட்சுமி, ராஜராஜேஸ்வரி, ஜெயா டிவியில் அலைபாயுதே என பல தொலைக்காட்சி தொடர்களில் அவர் நடித்தார்.

2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 2 வாரங்கள் மட்டுமே இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் ரஜினி நடித்த படம்.. 30 வருடங்களுக்கு முன்பே கோடிகளில் லாபம்..!

தற்போது பாத்திமா பாபு திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘உப்பன்னா’ என்ற சீரியலில் விசாலாட்சி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தெலுங்கு மாநிலங்களில் பிரபலமாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...