தமிழில் கடந்த 1986ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வெளியான படம்தான் ஊமை விழிகள். பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தது இப்படத்தின் திரைக்கதை.
விஜயகாந்த் டி எஸ் பி தீனதயாளன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அருண்பாண்டியன், ஜெய்சங்கர், சந்திரசேகர், சசிகலா ,கார்த்திக், வில்லனாக ரவிச்சந்திரன் என, நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
ஒரு காலத்தில் பிரமாண்ட தயாரிப்பாளராக அறியப்பட்ட ஆபாவணன் தயாரிப்பில் வந்த படம் இது. மனோஜ் கியான் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் எல்லாம் சுவை மிகுந்த பாடல்களாக இருந்தன.
திரைப்படக்கல்லூரி மாணவர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருந்தார்கள் . திரைப்படக்கல்லூரி மாணவர் அரவிந்தராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார்.
பெரும் வெற்றியும் வரவேற்பையும் பெற்ற இப்படத்தின் உருவாக்கம் மற்றும் தன் சொந்த அனுபவங்களையும் தயாரிப்பாளர் ஆபாவாணன் சில வருடம் முன் ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்காக தொகுப்பாளர் கானா பிரபாவிடம் அளித்த அரிய பேட்டி இது.