மலையாள நடிகரான பிரேம்நசீர் தமிழ்ல மொத்தம் 31 படங்கள் நடித்துள்ளார். கௌரவ வேடம் ஏற்று உயர்ந்தவர்கள் படத்தில் நடித்துள்ளார். அதையும் சேர்த்தால் மொத்தம் 32 படங்கள்.
பிரேம்நசீர் கதாநாயகனாக நடித்த படங்கள் 720. ஏறக்குறைய 80 கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஒரே ஆண்டில் 30 படங்கள் வெளியாகின. குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு ஒரே ஆண்டில் 20 படம், 30 படம் என்று வெளியானால் ஆச்சரியமில்லை.
கதாநாயகனாக நடித்த பிரேம்நசீருக்கு ஒரே ஆண்டில் 30 படங்கள் வெளியாகி உள்ளன. அப்படின்னா அந்த ஆண்டில் கதாநாயகனாக நடிக்க அவர் எத்தனை நாள்கள் படப்பிடிப்பிலே கலந்து கொள்ள வேண்டும் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்.
ஒரு ஆண்டில் 10க்கும் மேல் படங்கள் நடித்தாலே அடேங்கப்பா என்று சொல்லி அந்த ஹீரோவைப் புகழ்ந்து தள்ளுகின்றனர். அதே போல 720 படங்கள் நடித்தால் அவ்ளோதான். ஏன்னா இப்ப உள்ள ஹீரோக்கள் 100ஐத் தாண்டவே பெரும்பாடு படுறாங்க. பழைய கால நடிகர்கள் தான் 200 வரை நடித்துள்ளனர்.
கமல் 234ஐத் தொட்டு விட்டார். ஆனால் இவரோ எல்லாவற்றையும் தாண்டி யாரும் நெருங்கவே முடியாத சாதனையைப் படைத்து விட்டாரே. இவருடன் ஜோடி சேர்ந்த கதாநாயகிகள் கூட இத்தனை பேரா என பிரமிக்க வைத்துவிட்டார்.
வேறெந்த மொழிகளிலும் இப்படி ஒரு சாதனை கிடையாது. மலையாளத்தில் மட்டும் எப்படி சாத்தியமானது என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.