முதல் படத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு டஃப் கொடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த ஜெய் சங்கர்..

Published:

தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்படும் நடிகர் தான் ஜெய் சங்கர். தனது இயற்பெயரான சங்கர் என்பதை இயக்குநர் ஜோசப் தளியத் மேல் கொண்ட பிரியத்தால் ஜெய் சங்கர் என்று மாற்றிக் கொண்டார். பெயரிலேயே ஜெய் என்று வெற்றியைக் குறிக்கும் வகையில் வைத்துக் கொண்டதால் செண்டிமென்டாக அவருக்கு ஒர்க்அவுட் ஆனது.

நடிகர் ஜெய் சங்கரின் முதல் படம் இரவும் பகலும். 1965-ல் வெளியான இத்திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. பொதுவாகவே இளகிய மனம் கொண்ட ஜெய்சங்கர் ஏராளமான திரைக்கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளார். அவரின் படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படாதவாறு அடுத்த படத்திற்கும் கால்ஷீட் கொடுப்பார். சம்பளத்தையும் குறைத்து வாங்கிக் கொள்வார். மேலும் ஜெய்சங்கர் திரையுலகில் அடித்தட்டு தொழிலாளர்களுடனும் இயல்பாகப் பழகும் குணம் கொண்டவர். இதனால் இவர் ஷுட்டிங் என்றாலே ஜாலியாக இருக்குமாம்.

அன்னக்கிளி படத்துக்கு முன் இளையராஜா இசையமைத்த முதல் பாடல் எது தெரியுமா? இசைஞானியாக உருவாவதற்கு அச்சாரம் போட்ட கிராமத்து பாட்டு..

க்ரைம் படங்கள், திரில்லர் படங்கள், கௌபாய் படங்கள் என்றாலே 60-களின் இறுதியில் அது ஜெய்சங்கர் படம் தான். எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர் தனி ரூட் என்றால் ஜெய்சங்கர் எடுத்தது ஆக்சன் வழி. தனது படங்களில் சண்டைக்காட்சிகளில் அதிகம் நடித்துப் பெயர் பெற்றவர். பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் இவரின் ஏதாவது ஒரு படம் வெளியாகும் என்பதால் வெள்ளிக்கிழமை நாயகன் என்றும் திரைத்துறையில் அழைக்கப்பட்டார்.

தனது முதல் படத்தில் நடிக்கும் போது நடிகை வசந்தாவை தொட்டு நடிக்க ரொம்பவே கூச்சப்ட்டாராம் ஜெய்சங்கர். இன்றும் இரவும் பகலும் படத்தைப் பார்க்கும் போது ஜெய்சங்கர் வசந்தாவுடன் நெருக்கமான காட்சிகளில் தயக்கம் காட்டுவது தெரியும்.

1965-ல் பொங்கலன்று வெளியான இரவும் பகலும் படம் இரு ஜாம்வான்களுடன் போட்டி போட்டது. ஒருவர் எம்.ஜி.ஆர். எங்க வீட்டுப் பிள்ளை படமும், மற்றொருவர் சிவாஜி பழனி என்ற படமும் வெளிவந்தது. எனினும் இரு ஜாம்பவான்களுடன் இரவும் பகலும் போட்டி போட்டு சூப்பர்ஹிட் ஆகியது.

மேலும் உங்களுக்காக...