தமிழ் சினிமாவில் சரோஜா தேவி, சாவித்ரிக்குப் பின் கொடிகட்டிப் பறந்தவர் கே.ஆர்.விஜயா. புன்னகை அரசி என அழைக்கப்படும் கே.ஆர்.விஜயா அந்தக் காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின்களில் முன்னணியில் இருந்தவர். ஆயினும் அன்றைய காலகட்டத்தில் இவர் நடித்த படம் ஒன்று தோல்வியைத் தழுவ கே.ஆர்.விஜயா செய்த செயல்தான் அவரை இன்றும் பேசச் செய்கிறது.
இயக்குநர் மாதவன் இயக்கித் தயாரித்த ‘முகூர்த்த நாள்’ என்ற பெரும் தோல்வி அடைகிறது. என்றாலும் படத்தின் நாயகியான கே.ஆர்.விஜயாவுக்கு ஒப்பந்தப்படி சம்பளப் பணத்தைக் கொடுக்க அவரது வீட்டுக்குப் போனார் மாதவன். தனது சம்பளப் பணத்தை மொத்தமாக வாங்கிக்கொண்டு பூஜை அறைக்குச் சென்ற விஜயா, அதைக் கடவுள் முன்பு வைத்து, எடுத்துவந்து இயக்குநரிடமே திரும்பக் கொடுத்துவிட்டார். நெகிழ்ந்து போனார் இயக்குநர்.
கே.ஆர்.விஜயாவின் தொழில் பக்திக்கு இன்னொரு சான்று :
அக்காலத்தில் தேவர் பிலிம்ஸ்-ல் நடிக்க போட்டா போடி போடும் நடிகைகளுக்கு மத்தியில் தேவரே கே.ஆர்.விஜயாவின் வீட்டிற்கு சென்று அவரை தனது படத்தில் நடிக்க வைத்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
தேவர் தனது தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் ‘அக்கா தங்கை’ என்ற படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். அக்கா வேடத்தில் நடிக்கச் சவுகார் ஜானகியை ஒப்பந்தம் செய்தாகிவிட்டது. தங்கை வேடத்துக்கு யாரைப் பிடிப்பது? கதாசிரியருடன் ஆருர்தாஸ் உடன் விவாதித்துக் கொண்டிருந்தார் தேவர். பல பெயர்களைப் பரிசீலித்துவிட்டு இறுதியில் கே.ஆர். விஜயா என்றதும் தேவர் முகம் மலர்ந்தது.
ஆனாம் மலர்ந்த வேகத்தில் வாடியது. “அந்தப் பெண் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லையே?” என்று தயங்கினார். “ நீங்கள்போய் கேட்டால் மறுக்கமாட்டார்.” என்றார் தாஸ். புன்னகையரசியின் வீட்டுக்குப் போனார் தேவர். அப்போது கே.ஆர். விஜயா கணவரிடம் “விஜயா தங்கையாக நடித்தால் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியடையும். இதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்” என்று நாயரைப் பார்த்துக் கேட்டார். 3
தேவர் கேட்டதும் சட்டென்று மனைவியின் முகத்தைப் பார்த்தார் கணவர் வேலாயுதம். அவ்வளவுதான். கே.ஆர். விஜயாவின் கண்கள் கலங்கி உடைந்தன. “என்னை மன்னிச்சுடுங்கண்ணே! இனிமே எனக்கு நடிக்க வருமான்னு தெரியல. எல்லாம் மறந்துபோச்சு!” என்றார். ஆனால் தேவரைப் பார்த்து நாயர் சொன்னார், “ சேட்டா.. உங்க படத்துல விஜயா நடிப்பா.. அதுக்கு நான் பொறுப்பாக்கும்” என்றார். நிறைந்த மனதுடன் தேவர் கிளம்பினார்.
தங்கையாகக் கே.ஆர்.விஜயாவும் அக்காவாகச் சவுகார் ஜானகியும் நடித்த அந்தப் படம் வெற்றிபெற்று நூறு நாட்களைக் கண்டது. கே..ஆர். விஜயாவின் திரைப் பயணத்தில் இரண்டாவது அத்தியாயத்தை அந்தப் படம் தொடங்கி வைத்தது.