பார்த்திபன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு அளவு 7 ஆகும். இப்படத்தினை அவரே தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனமான பயோஸ்கோப் பிலிம் ப்ரேமர்ஸின் கீழ் தயாரித்து இருந்தார்.
இது பார்த்திபன் இயக்கத்தில் வெளியான குடைக்குள் மழை போன்று ஒரு வித்தியாசமான கதையினைக் கொண்ட திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படத்தில் இவரைத் தவிர வேறு யாரும் நடிக்கவில்லை, இவர் ஜெயிலுக்கு உள்ளே இருப்பதுபோன்றும், அவரது மகன் ஜெயிலுக்கு வெளியே உள்ள விசாரணை அறையில் அமர்ந்து இவருடன் பேசுவது போன்றும் கதை அமைக்கப்பட்டிருக்கும்.
இவரிடம் விசாரணை செய்யும் காவலர்களின் முகமும் திரையில் காட்டப்பட்டிருக்காது, அவர்களின் குரல் மட்டுமே கேட்கப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
இதுபோன்று ஒரு நடிகரை மட்டுமே வைத்து அவரே இயக்கிய திரைப்படம் வெளிவந்தது இதுவே முதல் முறையாகும். இதனால் இந்தப் படம் பல திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்தத் திரைப்படம் ரூ.1 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய மற்றும் இந்திய சாதனைப் புத்தகத்திலும் இப்படம் இடம் பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.