படம் ஓடாவிட்டால் காசை திருப்பிக் கொடுக்கணும்: தயாரிப்பாளர் நிபந்தனையால் நடிகர்கள் அதிர்ச்சி

By Staff

Published:


9925b339c982c3c93f77d28cdf7f7cca

ஒரு திரைப்படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் உச்ச நட்சத்திரங்களுக்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை. அவர்களுக்கு உரிய சம்பளம் சரியாக வந்துவிடும். அது மட்டுமின்றி அந்த திரைப்படம் 200 கோடி 300 கோடி வசூல் செய்ததாக பொய்யான செய்தியை தங்களுடைய ரசிகர்கள் மூலம் பரப்பி, அடுத்த படத்திற்கு இருமடங்கு சம்பளத்தை நடிகர்கள் பெற்று வருகின்றனர். நடிகர்களின் இந்த சம்பள உயர்வால் பல தயாரிப்பாளர்கள் காணாமல் போயுள்ளனர்

இந்த நிலையில் இன்று கூடிய தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. முதல் முடிவாக ஒரு திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் கழித்த பின்னரே அந்த படம் இணையதளங்கள் மற்றும் டிஜிட்டலில் ஒளிபரப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது

இரண்டாவதாக உச்ச நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்கள் தோல்வி அடைந்தால் அந்த உச்ச நட்சத்திரம் அந்த தோல்விக்கு பொறுப்பேற்று நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டுக்கு தயாரிப்பாளர்கள் மட்டும் உச்ச நட்சத்திரங்கள் ஒப்புக் கொள்வார்களா என்பது போகப்போகத்தான் தெரியும்

Leave a Comment