பஜ்ஜி, வடை, பிரியாணி ஸ்னாக்ஸ், வறுவல், பொறியலை காண்பித்து விளம்பரம் வேண்டாம்- குஷ்பு வேதனை

கொரோனா பரவலால் அனைவரும் வீட்டில் இருந்து ஆடுவது, பாடுவது, வித்தியாசமான உணவு வகைகளை தயாரிப்பது என இருந்து வருகின்றனர். இதில் சிலர் நான் செய்த டிஷ் என கவர்ச்சிகரமான உணவு வகைகளை சிலர் வெளியிட்டு…

கொரோனா பரவலால் அனைவரும் வீட்டில் இருந்து ஆடுவது, பாடுவது, வித்தியாசமான உணவு வகைகளை தயாரிப்பது என இருந்து வருகின்றனர்.

f95c8bfde4ac02625335637f51d51c8e

இதில் சிலர் நான் செய்த டிஷ் என கவர்ச்சிகரமான உணவு வகைகளை சிலர் வெளியிட்டு வருகின்றனர்.

நான் செய்த பிரியாணி, நான் செய்த ஜிஞ்சர் சிக்கன், நான் செய்த மொறு மொறு வடை, மஷ்ரூம் ப்ரை என பலரும் வித விதமான கவர்ச்சிகரமான உணவு வகைகளை முகநூலிலும், டுவிட்டரிலும் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர்.

இதற்கு குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால் பலரும் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டமான சூழலில் இருந்து வரும் இந்த நேரத்தில் இது போல கவர்ச்சிகரமான உணவு வகைகளை வெளியிடாதீர்கள் . சாப்பிட வழியில்லாத பலருக்கு வேதனையை கொடுக்கும் இந்தக் கொடுமையான சூழலில் ஒரு வேளை உணவுக்குப் பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சிறிது ஒத்துழைப்பை வழங்குவோம். சாப்பிடுங்கள். ஆனால், அவற்றைக் காட்சிப்படுத்தாதீர்கள்”.என குஷ்பு கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன