எட்டு வருசம் ஆனாலும் இன்னுமா- சீனு ராமசாமி நெகிழ்ச்சி

By Staff

Published:

கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சீனு ராமசாமி , முதல் படத்தை மட்டும்தான் மசாலா தடவி கொடுத்தார். அவரின் அடுத்தடுத்த படங்கள் கலைப்படைப்பாகவே அமைந்தன.

3be92ee276dc8b81766fd77087560a1a

இவரின் நீர்ப்பறவை திரைப்படமும் அந்த வகையில் ஒரு கலைப்படைப்பாகவே இருந்தது.

கடற்கரையோர மக்களின் வாழ்வியல் முறைகளை இவர் இப்படத்தில் கூறி இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தை டிவியில் பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து டுவிட்டரில் சீனு ராமசாமிக்கு வாழ்த்து மழை பொழிந்திருக்கின்றனர்.

இதை மகிழ்ச்சியோடு வெளியே கூறியுள்ள சீனு ராமசாமி, எட்டு வருடம் ஆகியும் டிவியில் இதை பார்த்து இதற்கு ரெஸ்பான்ஸ் வருகிறதே என மகிழ்ச்சியடைந்துள்ளார்.

Leave a Comment