விஜய் வீட்டில் ரெய்டுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஏமாற்றம் ஒரு பைசா கூட தேறவில்லை

By Staff

Published:


994340cd4108d6ca1844870983ca4f3c

பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகர் விஜய், பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், பிகில் திரைப்படத்திற்கு பைனான்ஸ் அளித்தவர் ஆகியோர் வீடுகளில் நேற்று முதல் தொடர்ச்சியாக அதிரடியாக வருமானத்தை வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர்

பைனான்சியர் வீட்டிலும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் வீடுகளிலும் கோடிக்கணக்கில் பணமும் ஆவணங்களும் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் விஜய் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட கருப்பு பணம் கண்டெடுக்க முடியவில்லை என அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது

பிகில் படத்திற்காக விஜய் ரூபாய் 30 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் அந்த 30 கோடிக்கு அவர் சரியாக வரி கட்டி இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் அதற்கு மேல் அவர் சம்பளம் வாங்கி இருக்கலாம் என்ற எண்ணத்தில் வருமான வரித்துறையினர் ஆவணங்களை தேடிப் பார்த்தும் எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதனால் வருமான வரித் துறையினருக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment