எவ்வளவு காசு கொடுத்தாலும் இந்த சீன்ல மட்டும் நடிக்கவே மாட்டேன்… அப்படி ஒரு பயம் எனக்கு… டெல்லி கணேஷ் பேச்சு…

By Meena

Published:

டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவில் துணை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் ஆவார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக டெல்லியை தளமாக கொண்ட தட்சிண பாரத நாடக சபாவில் உறுப்பினராக இருந்ததால் தனது பெயரை டெல்லி கணேஷ் என வைத்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் இந்திய விமானப் படையில் பணியாற்றிய டெல்லி கணேஷ் அவர்கள் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் அந்த பணியை விட்டுவிட்டு இயக்குனர் கே. பாலச்சந்தரை சந்தித்தார். 1976 ஆம் ஆண்டு ‘பட்டின பிரவேசம்’ என்ற திரைப்படத்தில் கே. பாலசந்தர் டெல்லி கணேஷ் அவர்களை அறிமுகப்படுத்தினார்.

1981 ஆம் ஆண்டு ‘எங்கம்மா மகாராணி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார் டெல்லி கணேஷ். பின்னர் துணை கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் டெல்லி கணேஷ்.

1979 ஆம் ஆண்டு ‘பாசி’ திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு அரசு மாநில திரைப்பட விருதுகளின் சிறப்பு பரிசு, கலைமாமணி போன்ற விருதுகளை வென்றவர். வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் பல பிரபலமான தொடர்களில் நடித்தவர் டெல்லி கணேஷ். எமோஷனல் காட்சிகளில் அற்புதமாக நடிப்பவர் டெல்லி கணேஷ்.

தற்போது, தனது சினிமா வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட டெல்லி கணேஷ் அவர்கள், எவ்வளவு ருபாய் காசு கொடுத்தாலும் இறந்து போற மாதிரி உள்ள சீன்ல மட்டும் நடிக்கவே மாட்டேன், இறப்பு அப்டினாலே ரொம்ப பயம் எனக்கு என்று கூறியுள்ளார் டெல்லி கணேஷ்.