நடிகர் பிரேம்ஜி நடிகராக மட்டுமல்லாது, இசையமைப்பாளர் பாடகர் என பிசியாக இருந்துவருகிறார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என அறியப்பட்டதைவிட, வெங்கட் பிரபுவின் தம்பி எனவே அறியப்பட்டுள்ளார்.
இவர் 2003 ஆம் ஆண்டு விசில் படத்தில் அறிமுகமாகி 17 ஆண்டுகளைத் தாண்டியும் தொடர் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். இவர் மற்ற இயக்குனர்களின் படத்தை விடுத்து, தன் அண்ணன் வெங்கட் பிரபுவின் அனைத்துப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக ஜாம்பி, சிம்பா, ஆர்கே நகர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்து வரும் அவரிடம் நேர்காணலில் ஒருவர் திருமண சாப்பாடு எப்போது போடுவீர்கள் என்று கேட்க, “வீட்டில் எல்லோரும் எனக்கு எப்படியாவது திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று நினைத்தனர். என்னிடம் அதுகுறித்து வற்புறுத்தி பல முறை பேசினர்.
ஆனால் நான் திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறேன், வாழ்க்கையில் ஜாலியாக இருக்கணும்ங்க. அதைத் தவிர வேற எந்த யோசனையும் இல்லை. நமக்கு எதுக்குங்க கல்யாணம், குழந்தை எல்லாம்” என்று கூறியுள்ளார்.
