செம ஜாலியா டான்ஸ் ஆடும் ஆலியா… இதோ வீடியோ!!

By Staff

Published:

நடிகை ஆல்யா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். இவர் அந்த சீரியலில் மிகவும் அப்பாவியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலுக்கும், ராஜா ராணிக்கும் ஒரு காம்பிட்டிஷன் இருந்துகொண்டே இருக்கும். ஜீ தமிழில் ஆதி- பார்வதி ஜோடி எவ்வளவோ பேமஸோ அதே அளவு பேமஸ்தான் கார்த்தி- செம்பா ஜோடியும்.

fc6ec19a61e126717b0b384e5a14eb85

சீரியலில் இவர்களுக்கு இருந்த கெமிஸ்ட்ரி ரியல் லைஃப்லயும் வொர்க் அவுட் ஆக, சீரியலில் நடிக்கும் போதே இவர்கள் இருவரும் காதலிக்கத் துவங்கினர். இதுகுறித்து அவ்வப்போது பேட்டிகளைக் கொடுத்துவந்த இந்த ஜோடி விஜய் தொலைக்காட்சியின் பிரமாண்ட விருதுவிழா ஒன்றில் தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.

சீரியல் முடியும் முன் சிம்பிளாக ரகசியத் திருமணம் செய்து கொண்ட இவர்கள் சஞ்சீவ் வீட்டார் சம்மதத்துடன் ரிஷப்ஷனை முடித்த நிலையில், ஆல்யா கர்ப்பமாகினார்.

இந்தநிலையில் சமீபத்தில் இவர்களுக்கு ஐலா என்ற மகள் பிறந்தாள். நேற்று ஆலியா நேற்று தனது இன்ஸ்டாகிராமில் ரொம்பவும் ஜாலியாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டதுடன் எனது பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. நான் என் பிறந்தநாளில் என் மகள் ஜலா, நான், மற்றும் சஞ்சீவ் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவேன்” என்று பதிவிட்டு இருந்தார்.

Leave a Comment