தமிழ் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வரும் பிரபல நடிகை நிகிஷா படேல், தற்போது வாய்ப்பு இல்லாமல் இருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்
லண்டனில் செட்டில் ஆகி அங்கேயுள்ள தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஆங்கில திரைப்படங்களில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளார்
இதற்காக அவர் லண்டன் செல்ல உள்ளார். தற்போது கைவசம் இருக்கும் ஒருசில படங்களை முடித்து விட்டு அவர் லண்டன் செல்வார் என்றும் அங்கே அவர் திருமணமாகி செட்டில் ஆகி விடுவார் என்றும் கூறப்படுகிறது