திருமணமான 6 நாளில் மருத்துவமனை சென்ற பிரபல நடிகை.. என்னாச்சு?

பிரபல நடிகைக்கு கடந்த ஆறு நாட்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இன்று அவர் தனது கணவரோடு மருத்துவமனைக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து கர்ப்ப பரிசோதனையா? என நெட்டிசன்கள்…

sonakshi

பிரபல நடிகைக்கு கடந்த ஆறு நாட்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் இன்று அவர் தனது கணவரோடு மருத்துவமனைக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து கர்ப்ப பரிசோதனையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் ஜாகிர் இக்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 23ஆம் தேதி நடந்த இந்த திருமணத்தின் சில புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் வைரல் ஆனது என்பதும் இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மற்றும் அவருக்கும் அவருடைய கணவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சோனாக்‌ஷி சின்ஹா தனது கணவருடன் காரில் மருத்துவமனைக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மருத்துவமனை விசிட்டை ரகசியமாக சோனாக்‌ஷி சின்ஹா வைத்திருந்ததாகவும் ஆனால் அதை எப்படியோ தெரிந்து கொண்ட பத்திரிகையாளர்கள் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து காரில் செல்லும் வீடியோவை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து சோனாக்‌ஷி சின்ஹா கர்ப்பமாகி இருக்கலாம், அது குறித்த பரிசோதனைக்கு சென்று இருக்கலாம் என்று கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

ஏற்கனவே பாலிவுட் நடிகை அலியா பட் இதே போன்று திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் என்றும், திருமணம் முடிந்தவுடன் அவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து சோனாக்‌ஷி சின்ஹா  மற்றும் அவரது கணவர் எந்தவித கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதால் அவர் கர்ப்பம் என்பது உறுதி செய்யப்படவில்லை.