உங்களுக்கெல்லாம் மனிதாபிமானமே இல்லையா? கையும் களவுமாகப் பிடிபட்ட கும்பல்.. காரணத்தை தெரிஞ்சா அதிர்ந்து போயீருவீங்க..

Published:

தமிழகத்தில் பெண்சிசுக் கொலை என்பது அறவே ஒழிக்கப்பட்டு வரும் சூழலில் அவ்வப்போது சில சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. முறை தவறி பிறந்த குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசிச் செல்வது, அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்தால் கள்ளிப் பால் ஊற்றிக் கொல்வது போன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழக அரசு இந்த விஷயத்தில் முனைப்புடன் செயல்பட்டு அறவே இந்த முறைகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. மேலும் சமூக நலத்துறை மூலம் தொட்டில் குழந்தைத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் பின்தங்கிய பகுதிகளான தர்மபுரி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இந்நிலையில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் என்று 1994-ல் சட்டம் இயற்றப்பட்டு அது கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து ஸ்கேன் மையங்களிலும், மகப்பேறு மருத்துவமனைகளிலும் இச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

சிகரெட் பிடித்தால் தொண்டையில் முடி வளருமா? அரிய வகை நோய் குறித்து அதிர்ச்சி தகவல்..!

சமீபத்தில் யூடியூபர் இர்பான் தனது மனைவியின் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் அறிவித்தது பெரும் சர்ச்சையானது. எனினும் அவர் வெளிநாட்டு மருத்துவமனயில் ஸ்கேன் செய்து குழந்தையின் பாலினத்தை அறிவித்தார். இருந்த போதிலும் அவருக்கு எதிராக கடும்விமர்சனங்கள் எழுந்தது. தற்போது இதை விட பெரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னகாரம் பகுதியில் வசித்து வரும் லலிதா என்ற பெண் கருவுற்ற பெண்களிடம் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள ஆசையைத் தூண்டி அவர்களிடம் சில ஆயிரங்களை பெற்றுக் கொண்டு ஆளில்லாத ஒரு வீட்டில் சிறிய கருவி ஒன்றின் மூலம் குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்திருக்கிறார். இதற்காக ஒரு கும்பலே செயல்பட்டு வந்தது. மேலும் லலிதா இடைத்தரகராகப் பணிபுரிந்திருக்கிறார்.

இவ்விவகாரம் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி என்ற அதிகாரியின் கவனத்திற்குச் சென்றது. உடனே இவ்விவகாரத்தில் தலையிட்டு திடீர் ரெய்டு நடத்தினார். அப்போது அந்த கும்பல் கையும் களவுமாகப் பிடிபட்டது. கருவுற்ற பெண்களிடம் 13,000 வாங்கிக் கொண்டு குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் இதற்காக பிரத்யேக கருவி ஒன்றையும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரியின் இந்த திடீர் ரெய்டால் பதறிப் போன அந்த கும்பல் செய்வதறியாது திகைத்தது. இணை இயக்குநர் சாந்த அவர்களை லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார்.

தொடர்ந்து காவல்துறை மூலம் இந்த கும்பலைச் சேர்ந்த முருகேசன், நடராஜ், சின்னராஜ் மற்றும் லதா ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் முருகேசன் ஏற்கனவே சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து சிறைக்குச் சென்று ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...