நல்லவனா இருந்தா நாய் கூட மதிக்காது… அசீம் டைட்டில் வின்னர் குறித்து நெட்டிசன்கள் கருத்து!

Published:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 105 நாட்கள் நாடகம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் எதிர்பார்த்தபடியே அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். விக்ரமன் தான் டைட்டில் வின்னர் என ஐம்பதாவது நாளே தெரிந்துவிட்ட நிலையில் கடைசி நேரத்தில் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்று பலருக்கு குழப்பமாக இருக்கும்.

விக்ரமனுக்கு டைட்டில் வின்னர் பட்டம் கிடைக்காமல் போனதற்கு அரசியல் கட்சி தலைவர் ஒருவர்தான் காரணம் என்றும் அவர் மட்டும் இந்த விஷயத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் நிச்சயம் விக்ரமனுக்கு டைட்டில் பட்டம் கிடைத்திருக்கும் என்றும் பெரும்பாலான நெட்டிசன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சீசனில் மிகவும் மோசமான போட்டியாளர் என்று க்ச்ண்டனம் தெரிவிக்கப்பட்ட அசிமுக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்திருப்பதை பார்க்கும்போது இந்த நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுப்ப தோன்றுகிறது என பல நெட்டிசன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரசியல்வாதிகளை ரியாலிட்டி ஷோவில் ஒருவராக இணைத்தால் இந்த நிகழ்ச்சியே அரசியலாக மாறிவிடும் என்பதற்கு இந்த சீசன் ஒரு நல்ல உதாரணம் என்று இனிமேலாவது அரசியலாதிகளை அடுத்த சீசனில் இருந்து தவிர்க்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விக்ரமனின் ஆதரவாளர்கள் அசீமுக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்ததை கடுமையாக கண்டித்து வருகின்றனர். விக்ரமனை தோற்கடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தால் ஷிவினுக்காவது டைட்டில் பட்டம் கொடுத்திருக்கலாம் என்றும் அசீம் டைட்டில் பட்டத்திற்கு எந்த வகையிலும் தகுதி இல்லாதவர் என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் அசீம் தான் டைட்டில் வின்னர் என விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த டுவீட்டுக்கு ஏராளமான கண்டனத்துடன் கூடிய பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த பதிவுகள் இதோ

நல்லவனா இருந்தா நாய் கூட மதிக்காது ..நல்ல எடுத்துகாட்டு

சகோ இது தோல்வி தான் ஜாதிய வன்மம் சனாதன சூழ்ச்சிகள் அறதை தோற்கடித்து இருக்கின்ற #Azeem எதிரில் வேறு ஒருவர் இருந்தால் இந்த சக்திகள் அசிமை தோற்கடித்து இருக்கும்

இந்து மத வெறி சங்கிகள் #Azeem க்கு வாக்களித்தார்கள் பாமக, நாம் தமிழர், அட அதிமுக ஆட்கள் பலரும் கூட அசீமுக்கு வாக்களித்தனர். இவர்கள் அனைவரும் அசீமுக்கு ஆதரவானவர்கள் அல்ல. தோழர் #Vikraman???? அவர்களுக்கு எதிராக அசீமுக்கு வாக்களித்தவர்கள். இவர்கள் இணையும் புள்ளி சாதி

உண்மையான டைட்டில் வின்னர் எங்கள் தோழர் விக்ரமன் தான். நீங்கள் பல இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறீர்கள்.. நாங்கள் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்

முட்டாள்கள் அதிகம் உள்ள இந்த நாட்டில் அறிவாளி எப்படி வெற்றிபெற முடியும்???அந்த வகையில் நாங்கள் அறிவாளிகள் என்று பெருமையோடு களத்தில் நின்று போராடுவோம் நன்றி கெட்ட முட்டாள் மக்களுக்காக!….

டேய் நீங்க அசிங்கம்பிடிச்ச அசிமுக்கு ஒரு இத்துபோன டைட்டில் கொடுத்து இருக்கலாம். ஆனா உண்மையான டைட்டில் வின்னர் #Vikraman தான்

அம்பேத்கரையை திரும்ப, திரும்ப தோற்கடித்த நாடு, அம்பேத்கரைப் பற்றி பேசியவரை வெற்றி பெறச் செய்யுமா என்ன?

மேலும் உங்களுக்காக...