இந்த முரட்டு வில்லனுக்கு இப்படி ஓர் குரலா? பிரபல நடிகர்களின் பின்னனிக் குரலில் மிரட்டும் ரவிசங்கர்

By John A

Published:

முரட்டு வில்லனுக்குள் இளகிய மனசு என்று சொல்வோம் கேட்டிருக்கீறீர்களா? ஆம். தென்னிந்திய சினிமாக்களில் வில்லன் வேடத்தில் மிரட்டி ரசிகர்களை கவர்ந்தவர்தான் நடிகர் ரவி சங்கர். என்ன இதுகேள்விப் படாத பெயராக உள்ளதே என்று தேடுகீறீர்களா? தமிழ் சினிமாவின் பிரபல வில்லன்களான ஆசிஷ் வித்யார்த்தி, ஷாயாஜி ஷிண்டே போன்றோரின் குரல்கள் நமக்கு வெகு பரிச்சயம். இவர்களின் குரலைக் கேட்டாலே அது இந்தப் படம் தான் என்று எளிதாகக் கணித்து விடுவோம். அந்த அளவிற்கு இந்த இரு வில்லன்களுக்கும் தனது குரலால் அடையாளம் கொடுத்தவர்தான் ரவிசங்கர்.

நடிகராக மட்டுமின்றி டப்பிங் கலைஞராக சுமார் 3000 படங்களுக்கு மேல் குரல் கொடுத்துள்ளார் ரவிசங்கர். சினிமா உலகில் நடிகராக மட்டுமின்றி, திரைக்கதை எழுத்தாளர், டப்பிங் கலைஞர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர்.

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர்களான ரகுவரன், நாசர், பிரகாஷ் ராஜ், சோனு சூட், உபேந்திரா, சரண்ராஜ் உள்ளிட்ட பல நூறு நடிகர்களுக்கு பின்னனிக் குரல் இவர்தான் என்றால் நம்ப முடிகிறதா? தெலுங்கு சினிமா உலகின் முக்கிய திரைக்கலைஞராகத் திகழும் நடிகர் ரவிசங்கர் 1986 ஆலோச்சின் சந்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

2029 ஆம் ஆண்டு ‘அபொபிஸ்’ எனப்படும் மிகப்பெரிய சிறுகோள் பூமியை தாக்குவது சாத்தியமான உண்மை என ISRO கூறுகிறது…இது எவ்வளவு ஆபத்தானது தெரியுமா…?

மேலும் தொடர்ந்து படங்களில் நடித்த அவருக்கு வணிக ரீதியாக படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. எனினும் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. இந்நிலையில் அதன்பின் டப்பிங் கலைஞராக ஜொலிக்க ஆரம்பித்தார். டப்பிங் இவருக்கு கைகூடி வரவே தொடர்ந்து அதில் கவனம் செலுத்தினார். நடிகர் ரவிசங்கர் பெரும்பாலும் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தினார்.

ஆந்திர அரசின் நந்தி விருதுகளையும், தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னனி குரலுக்கான விருதினையும் பெற்றுள்ள நடிகர் ரவிசங்கர், தெலுங்கு சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான சாய் குமாரின் சகோதரர் ஆவார். மேலும் இவர்களின் தந்தையும், தாயும் தெலுங்கு சினிமாத் துறையில் டப்பிங் கலைஞர்களாக விளங்கியவர்கள் என்பது குறிப்பிட்டதக்கது.