எம்ஜிஆர் நல்ல பேரோடு போய்விட்டார்… நான் தான் மிஸ் பண்ணிட்டேன்..! கடைசி காலத்தில் உருகிய சிவாஜி!

நடிகர் திலகம் சிவாஜி தன் கடைசி காலகட்டத்தில் நெஞ்சை உருக்கும் வகையில் பேசியிருப்பது அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தத் தகவல் தற்போது கசிந்துள்ளது. வாங்க என்னன்னு பார்க்கலாம்.

தன் வாழ்நாளின் கடைசிகால கட்டத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் உருகியபடி சில வார்த்தைகளை சொல்லி இருக்கிறார். இதை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஊடகம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ்த்திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது சிவாஜி கணேசன் தான். 1952ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்க்தில் கருணாநிதி வசனத்தில் ‘பராசக்தி’ என்ற படத்தில் தான் சிவாஜி அறிமுகமானார். முதல் படத்திலேயே தன் அபார நடிப்பின் மூலம் தனி முத்திரையைப் பதித்தார். அவருக்கு என ரசிகர் பட்டாளம் உருவாகியது. அனைத்துத் தரப்பினரும் பாராட்டினர்.

தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகரானார். பல சரித்திரக் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்தார். அதே போல பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து அசத்தினார். அதே போல ரஜினி, கமல், சத்யராஜ் நடித்த படங்களில் கேரக்டர் ரோலிலும் நடித்து பட்டையைக் கிளப்பினார்.

Thevar Magan
Thevar Magan

படையப்பா, தேவர்மகன், ஜல்லிக்கட்டு, பூப்பறிக்க வருகிறோம், ஒன்ஸ்மோர் படங்களைச் சொல்லலாம். தயாரிப்பாளர் தாணு சிவாஜி மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார். அவரை சிவாஜி அன்புடன் புலி என்று தான் அழைப்பாராம். ஒருமுறை தனது வீட்டுக்கு மதிய உணவு அருந்த அழைத்தாராம் சிவாஜி.

அதை ஏற்ற தாணு அங்கு சென்றுள்ளார். அப்போது சிவாஜி, நான் பசியோடு இருக்கிறேன். நீ என்ன இவ்வளவு லேட்டா வார..? சாப்பிடு சாப்பிடுன்னு அன்போட சொன்னாராம்.

சாப்பிட்டு முடித்ததும் சிவாஜி, ‘புலி என்ன இருந்தாலும் மனது சாதாரணம் அல்ல. என் பேத்தியைப் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்குய்யா.’ அப்போது அவரது பேத்தியின் கணவர் சுதாகர் சிறையில் இருந்துள்ளார். இப்படி உருக்கமாகப் பேசினாராம் சிவாஜி.

‘இப்படி நான் கஷ்டத்தோடு எதுக்குய்யா வாழணும். எங்க அண்ணன் எம்ஜிஆர் நல்ல பேரோடு போய்விட்டார். நான்தான்யா மிஸ் பண்ணிட்டேன். மனசு கஷ்டமா இருக்கு. புலி நீ போயிட்டு வா’ன்னு தாணவை அனுப்பி வைத்தாராம் சிவாஜி. அடுத்த 15 நாள்களில் சிவாஜி இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.