தயாரிப்பாளர் திருமணத்தில் கலந்துக் கொண்ட தனுஷ் மற்றும் நயன்தாரா… வெளியான புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் பிளான்…

தற்போது இணையம் முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி நயன்தாரா மற்றும் தனுஷ் விவகாரம் தான். நயன்தாரா தனுஷின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார். ஆனால் தனுஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும்…

nayanthara

தற்போது இணையம் முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி நயன்தாரா மற்றும் தனுஷ் விவகாரம் தான். நயன்தாரா தனுஷின் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார். ஆனால் தனுஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வெளிவரவில்லை. அவர்கள் சட்டரீதியாக சந்திக்க போகிறார்கள் என்ற செய்திகள் தான் வெளியாயின.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஆகாஷ் அவர்களின் திருமண விழாவில் நயன்தாராவும் தனுஷும் கலந்து கொண்டு இருக்கின்றனர். கலந்து கொண்டது மட்டுமல்லாமல் இருவரும் ஒரே வரிசையில் அமர்ந்திருந்த போட்டோ வெளியாகி இணையத்தில் வைரலானது. ஆனால் இந்த சம்பவம் எதேச்சையாக நடந்தது அல்ல.

இதற்கு பின்னால் நயன்தாராவின் பக்காவா பிளான் இருந்திருக்கிறது. அது என்னவென்றால் தயாரிப்பாளரின் திருமண விழாவில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தனுஷ்க்கும் நயன்தாராவிற்கும் வெவ்வேறு இடத்தில் தான் சீட்டிங் ரேஜ்மென்ட் செய்திருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா தான் தனுஷ் இருக்கும் வரிசையில் தான் நான் அமர்வில் சோபாவை அங்கு போடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தனுஷின் பக்கமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்திருக்கிறார். இதை போட்டோவை எடுத்து வெளியிட்டது நிகழ்ச்சி நடத்துபவர்கள் பக்கமோ அல்லது பிரஸ் மூலமாகவோ வெளிவரவில்லை. புகைப்படத்தை எடுத்து வெளியிட்து நயன்தாரா டீம் தான். அதனால் இது பக்காவாக பிளான் செய்யப்பட்டு இருக்கிறது என்பது தெரிகிறது.

இப்படி படையப்பா நீலாம்பரி போல நயன்தாரா முயற்சி செய்து தனுஷின் முன்னால் தான் உயர்ந்தவர் என்று காண்பிக்க இப்படி செய்திருக்கிறார் என்று வலைப்பேச்சு சேனலில் கூறியிருக்கிறார்கள். தனுஷ் இதைப் பற்றி எதுவுமே கண்டுக்கொள்ளாமல் அவர் வழக்கம் போல எளிமையான மனிதராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்று இருக்கிறார்.