நயன்தாரா சொந்தமாக தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் ஆர்ஜே பாலாஜி?

By Staff

Published:


f67e8246386a76ea4202693449867a37-1

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பின்போது ஆர்ஜே பாலாஜியின் திட்டமிட்ட பணி நயன்தாராவை ரொம்பவே கவர்ந்தது. மிகச் சரியாக திட்டமிட்டு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே இந்த படத்தை முடித்துவிட்ட பாலாஜியை பார்த்து வியந்த நயன்தாரா அவர் இயக்கும் அடுத்த படத்தை தானே தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார்

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குவார் என்றும் ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக முன்னணி ஹீரோ ஒருவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது

Leave a Comment