நயன்தாரா நடித்தும் பிளாப் ஆனா 5 படங்களின் லிஸ்ட் இதோ…

Published:

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா பற்றி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

தென்னிந்திய திரையுலகில் நயன்தாரா நடிப்பில் ஏராளமான படங்கள் ஹிட் அடித்து வரும் நிலையில் அடுத்தடுத்து பல படங்கள் வெளிவர தயாராக உள்ளது. அந்த வகையில் நயன்தாரா நடித்த முதல் ஹிந்தி படமான ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அட்லீ இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா ராணுவ வீராங்கனையாக நடித்துள்ளார்.

இதை அடுத்து அகமத் இயக்கத்தில் இறைவன் திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது. இது மட்டுமல்லாமல் ஜெயம் ரவியுடன் ஒரு படமும், இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணாவின் படத்திலும், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.

அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, சினிமா திரையில் தொடக்க காலத்தில் பல இன்னல்களை சந்தித்துள்ளார். தனது விடாமுயற்சில் தான் தற்பொழுது இந்த முன்னணி ஹீரோயின் இடத்தை பிடித்துள்ளார்.

தற்போழுது தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருக்கிறார். ஆனால் அவர் நடித்த சில படங்கள் பிளாப் ஆகி உள்ளது.

அந்த வரிசையில் முதல் படம் தலைமகன். 2006ல் வெளிவந்த இந்த படத்தில் சரத்குமார் டைரக்டர் ஆக அறிமுகமானார். இந்த படத்தில் மேகலா என்னும் கதாபாத்திரத்தில் பத்திரிக்கையாளராக நயன்தாரா நடித்திருப்பார்.

இரண்டாவது படம் ஏகன். நடன இயக்குனர் ராஜூ சுந்தரத்தின் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டில் இந்த படம் வெளிவந்தது. இந்த படத்தில் அஜித் ஹீரோவாக நடித்துள்ளார். நயன்தாரா மல்லிகா கதாபாத்திரத்தில் கல்லூரி வேதியியல் பேராசிரியையாக நடித்திருப்பார்.

மூன்றாவது படம் வில்லு. நடன இயக்குனர் பிரபு தேவா இயக்கத்தில் இந்த படம் 2009 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் ஹிந்தியில் வெளியான சோல்ஜர் படத்தின் ரீமேக்காக உருவாக்கப்பட்டது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். படம் முழுக்க வடிவேலுவின் காமெடி காட்சிகள் இடம் பெற்றிருக்கும். ஆனாலும் இந்த படம் எதிர்பார்த்த அளவு வசூல் சாதனை படைக்க வில்லை.

விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து உருவாக இருக்கும் எந்திரன் 3 அப்டேட் இதோ!

நான்காவது படம் குசேலன். பி.வாசு இயக்கத்தில் ஆகஸ்ட் 1, 2008 ல் இந்த படம் வெளிவந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த், பசுபதி, மீனா, வடிவேல் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா தனது நிஜ பெயரில் தான் நடித்திருப்பார். சந்திரமுகி படத்திற்கு பின் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் அதை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை.

ஐந்தாவது படம் மிஸ்டர் லோக்கல். இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிப்ரவரி 2019 அன்று இந்த படம் திரைக்கு வந்தது. வேலைக்காரன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இணைந்து நடித்த படம் இது. இந்த படமும் மக்கள் மனதில் இடம் பிடிக்க தவறியது.

மேலும் உங்களுக்காக...