நடிகர் யோகிபாபு 2009 ஆம் ஆண்டு யோகி என்னும் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். ஏறக்குறைய 11 ஆண்டுகள் ஆன போதில் தமிழ் சினிமாவின் உச்ச கட்ட சம்பளம் பெறும் நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்து வருகிறார்.
இதுவரை 121 படங்களில் நடித்துள்ள இவர் 14 படங்களைக் கையில் வைத்துள்ளார். இவர் கோல மாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒரு தலையாக காதலிக்க அது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்றது.

தற்போது யோகிபாபு இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘பேய் மாமா’ படத்தில், நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது, “யோகிபாபு பேய் மாமா படத்தில் நயன் தாரா, சமந்தா, தமன்னா என்று 3 கதாநாயகிகளைக் காதலிக்கிறார்.
நயன்தாரா, சமந்தா அவர்களின் காதல் தோல்வி அடைய, தமன்னாமீது தீவிர காதல் கொள்கிறார்.
எப்படியாவது திருடி ரூ.100 கோடி பணம் சம்பாதிப்பதையும், தமன்னாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்வது என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வதுதான் கதை.
இதில் யோகிபாபுவின் கதாபாத்திரம் மக்கள் ரசிக்கும்படியாக நிச்சயம் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
