த்ரிஷாவிற்கு மொபைலைப் பயன்படுத்தக் கற்றுத்தரும் கௌதம் மேனன்!!

கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியாவில் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இதனால் சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் நடிகர், நடிகைகள் தாங்கள் பொழுதுபோக்கும் விதம் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு…

கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியாவில் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இதனால் சினிமாப் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில் நடிகர், நடிகைகள் தாங்கள் பொழுதுபோக்கும் விதம் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை த்ரிஷா ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார். அதாவது கௌதம் மேனன் த்ரிஷாவிற்கு ஆப்பிள் ஐபோன் கேமராவில் புகைப்படம் எடுப்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

955a39a905f7cd6ce63debbbf120779d

அதாவது சிம்பு  கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இளைஞர்களின் மனம் கவர்ந்த படமாக பார்க்கப்பட்டது. அடுத்து த்ரிஷா மீண்டும் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார்.

தற்போது த்ரிஷா ட்விட்டரில், “என்ன ஒரு ஜாலியான காலைப்பொழுது. நாங்கள் என்ன படம் பிடித்திருக்கிறோம் என்பதை உங்களுக்கு காட்ட ஆர்வமாக இருக்கிறேன். நன்றி கவுதம் மேனன்” என்று பதிவிட்டுள்ளார்.

அப்படி என்ன தான் இவர்கள் இருவரும் சேர்ந்து படம் எடுக்கிறார்கள் என்று வீடியோவினை திறந்து பார்த்தால் த்ரிஷாவிற்கு கௌதம் மேனன் எப்படி ஆப்பிள் ஐபோனில் புகைப்படம் எடுப்பது என்பது குறித்து கற்றுத் தருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன