நடிப்புன்னா எப்படி இருக்கணும் தெரியுமா? தேசிய விருது பெற்ற நித்யாமேனன் பளீச்

By John A

Published:

அண்மையில் அறிவிக்கப்பட்ட 70-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நடிகை நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்று நடித்து ஷோபனா கதாபாத்திரம் ஒவ்வொரு ஆணுக்கும் இப்படி ஒரு தோழியாக, மனைவியாக நமக்கு மனைவி கிடைக்க மாட்டாளா என ஏங்க வைக்கும் அளவிற்கு அந்தக் கதாபாத்திரத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார். ஏற்கனவே பிலிம் பேர் விருதினைப் பெற்ற நடிகை நித்யா மேனன் தற்போது திருச்சிற்றம்பலம் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

இதுமட்டுமன்றி மேகம் கருக்காதே பாடலுக்கும் சிறந்த நடன இயக்குநர்களுக்கான விருது ஜானி மற்றும் சதீஷ் மாஸ்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்றுடன் திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையொட்டி நித்யாமேனன் சிறந்த நடிப்பு எது என்பது பற்றி நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார்.

அதில், திருச்சிற்றம்பலம் படத்திற்காக எனது முதல் தேசிய விருதினைப் பெற்றதற்கு மகிழ்ச்சி பார்ப்பதற்கு எளிமையாகத் தெரியும் நடிப்பிற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு எளிமையானதல்ல எனப் புரிந்து கொண்ட தேசிய விருது குழுவினருக்கு நன்றி. சிறந்த நடிப்பு என்பது எடைக் குறைப்போ, அதிகரிப்போ, செயற்கையாக உடலை மாற்றிக் கொள்வதிலோ கிடையாது. அது நடிப்பின் ஒரு பகுதிதானே தவிர அதுவே நடிப்பு கிடையாது. இதை நிரூபிக்கவே முயற்சித்து வருகிறேன்.

கங்குவாவுடன் மோதும் வேட்டையன்.. ரிலீஸ் தேதி அறிவிப்பால் குஷியான சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

இந்த விருதானது பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ், நான் என எங்கள் நான்கு பேருக்கான விருது. ஏனென்றால் ஒரு படத்தில் நடிகருக்கு இணையாக நடிக்கும் நடிகைக்கான கதாபாத்திரத்தில் இதுவரை நான் நடித்ததில்லை. உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் இடத்தில் முன்னேறுவது மிகக் கடினம். இன்னும் நிறைய படங்கள் சேர்ந்து பண்ணலாம். என நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார் நித்யா மேனன்.

நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே ஓகே கண்மணி, இருமுகன், மெர்சல் என ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி இயக்குநர்களின் பேவரிட் நடிகையாகத் திகழ்கிறார் நித்யாமேனன்.