நல்லவனுக்கு நல்லவன்… கிளைமாக்ஸை மாற்றிய ஏவிஎம் சரவணன்… முதலில் முடிவு செய்த கிளைமாக்ஸ் இதுதான்…!!

By Bala Siva

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் 90களில் ரசிகர்களுக்கு பிடித்த படம் என்றால் அது பாட்ஷா தான் என்பதை கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். ஆனால் அதற்கு முன்பு நல்லவனுக்கு நல்லவன் தான் 80களில் இருந்த ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா, நடித்த இந்த படத்தில் கார்த்திக் ஒரு முக்கிய கேரக்டர் நடித்திருப்பார்.

இந்த படம் கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஊடகங்கள் அனைத்தும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுதியதால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் இந்த படம் 150 நாட்கள் ஓடியது. இந்த திரைப்படத்தின் வசூல் என்பது இன்றைய மதிப்பில் 370 கோடி ரூபாய் ஆகும்.

ரஜினி, கமல் பீல்டில் இருந்த போது அவுட்டாகாத நடிகர் சிவகுமார்… அப்புறம் பீல்டு அவுட்…. என்ன காரணம்னு தெரியுமா?

nallavanukku nallavan

இந்த படத்தின் கதைப்படி ரஜினிகாந்த் ஒரு ரெளடியாக சுற்றி கொண்டிருந்த நிலையில் அவரை திருமணம் செய்யும் ராதிகா அவரை திருத்துவார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும். அந்த குழந்தை வளர்ந்து குமரியான பின் கார்த்திக்கை காதலிப்பார். இந்த நிலையில் அதன் பின் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருந்தது.

கார்த்திக் இந்த படத்தில் சற்று வில்லத்தனமான கேரக்டரில் நடித்திருப்பார். கார்த்திக் நடிக்க வாய்ப்புகள் குறைவாக இருந்த நேரத்தில் தான் ஏவிஎம் நிறுவனம் கேட்டுக் கொண்டதற்காக இந்த படத்தில் இந்த கேரக்டரை ஏற்று நடித்தார். ரஜினிகாந்த் மகளாகவும் கார்த்திக் ஜோடியாகவும் இந்த படத்தில் துளசி நடித்திருந்தார். மேலும் வி கே ராமசாமி, மேஜர் சுந்தரராஜன், ஒய் ஜி மகேந்திரன், விசு உள்பட பலரும் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.

நேருக்கு நேராக மோதிக்கொண்ட ரஜினி, கமல் படங்கள்! வெற்றி யாரு பக்கம்!

இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம் பெற்றன. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு, உன்னை தானே தஞ்சம் என்று, வச்சிக்கவா உன்ன மட்டும், முத்தாடுதே, நம்ம முதலாளி, என்னை தானே என்ற ஆறு பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியதும் பலர் அறிந்ததே. இந்த நிலையில் தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதாக இயக்குனர் எஸ் பி முத்துராமன் பின்னாளில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

முதலில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்திக் மற்றும் துளசி ஆகிய இருவரும் தங்கள் தவறுகளை புரிந்து கொண்டு ரஜினியிடம் மன்னிப்பு கேட்பதாக இருக்கும். அப்போது ரஜினி, தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் இருவருக்கும் கொடுத்துவிடுவார்.

nallavanukku nallavan1

எல்லா சொத்தையும் எங்களிடம் கொடுத்து விட்டீர்களே, உங்களுக்கு என்று எதுவும் வேண்டாமா என கார்த்திக் கேட்க, தனது மனைவி ராதிகாவின் புகைப்படத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியே செல்வது போன்றும், கார்த்திக் மற்றும் துளசி சோகத்துடன் பார்ப்பது போன்று படம் முடிந்திருக்கும்.

இந்த கிளைமாக்ஸ் மிகவும் திருப்தியாக இருந்ததாக எஸ்பி முத்துராமன் மற்றும் ரஜினிகாந்த் கூறிய நிலையில் மறுநாள் இந்த கிளைமாக்ஸ் காட்சியை ஏவிஎம் சரவணன் பார்த்தார். அப்போது அவர் எஸ் பி முத்துராமனிடம் இந்த படம் முழுக்க முழுக்க நாம் கமர்சியல் படமாக எடுத்திருக்கிறோம். ஆரம்பத்திலிருந்து ரஜினி ரசிகர்களுக்கான படமாக இது அமைந்துள்ளது. ஆனால் இந்த கிளைமாக்ஸ் விருதுக்கான படம் போல் இருக்கிறது.

இந்த கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது ஆனால் அதே நேரத்தில் ரஜினி ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே கார்த்திக் கேரக்டருக்கு ஒரு ஆபத்து வருவது போன்றும், ரஜினி தனது வீரதீர செயலை காண்பித்து எதிரிகளுடன் சண்டை போட்டு கார்த்திகை மீட்டுக்கொண்டு வருவது போன்று கிளைமாக்ஸ் காட்சியை மாற்றுங்கள். அப்போதுதான் ரஜினி ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார்.

கோடிக்கணக்கில் லாபம் பெற்ற அமிதாப் படம்.. ரீமேக் செய்து தோல்வி அடைந்த ரஜினிகாந்த்..!

இதனை அடுத்து தான் எஸ்பி முத்துராமன் ரஜினியுடன் கலந்து பேசி கிளைமாக்ஸை மாற்றி எடுத்தார். கார்த்திக்கை வில்லன் கூட்டம் ஒரு மர அறுவை தொழிற்சாலைக்கு கடத்தி செல்வது போன்றும், மீண்டும் ஆக்சன் அவதாரம் எடுக்கும் ரஜினிகாந்த், ஆவேசமாக வில்லன்களை துவம்சம் செய்து கார்த்திகை மீட்டு வந்து தனது மகளிடம் ஒப்படைக்கும் வகையில் கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டிருக்கும். இந்த கிளைமாக்ஸ் ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததோடு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.