நாயகன் படத்தில் மிஸ் ஆன நடிகர் திலகம்.. கோட்டை விட்ட மணிரத்னம்.. தட்டி தூக்கிய தேவர் மகன்!

By John A

Published:

தமிழ் சினிமாவில் ‘நாயகன்’ திரைப்படம் ஏற்படுத்திய புரட்சியை இதுவரை எந்த திரைப்படமும் ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு ஆஸ்கர் வரை சென்று உலகின் மிகசிறந்த 100 படங்களில் ஒன்றாக நாயகன் திரைப்படம் இன்றும் பேசப்படுகிறது. இந்த படத்தின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். மணிரத்னம், கமல், இளையராஜா, பி சி ஸ்ரீ ராம் என திரையுலக ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கிய ஓர் அற்புத படைப்பு நாயகன்.

3 தேசிய விருதுகள், பல சினிமா விருதுகள் என விருது மழையில் நனைந்தது நாயகன். மும்பை நிழல் உலக தாதா வரதராஜ முதலியாரின் கதையை அப்படியே சினிமாவாக எடுத்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார் மணிரத்னம். முக்தா சீனிவாசன் தயாரித்த இப்படம் வசூலிலும் சாதனை புரிந்தது. நாயகனுக்குப் போட்டியாக அப்போது ரஜினியின் ‘மனிதன்’ படம் வெளியாகி அந்த படமும் வெற்றியை சுவைத்தது.

எழுத்தாளர் பாலகுமாரன் வரிகளில் இன்றும் பல வசனங்கள் ட்ரெண்டிங்கில் உள்ளன. பிழைப்பு தேடி மும்பைக்கு வரும் ஓர் இளைஞர் எப்படி பின்னாளில் மும்பையே நடுங்கும் நிழல் உலக தாதாவாக மாறுகிறார் என்பதை மணிரத்னம் செதுக்கியிருப்பார். அதுவரை காதல் மன்னனாக ஜொலித்த கமல்ஹாசன் நாயகன் படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் சென்றார்.

காதலுக்கு மரியாதை படத்துல ஜோதிகாவா..? அதுவும் ஏ .ஆர். ரஹ்மான் இசை இந்த விஷயம் எப்போ நடந்துச்சு தெரியுமா?

கமலுடன் சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால் இயக்குனர் மணிரத்னம் கமலுக்கு அடுத்த படியாக முதலில் தேர்வு செய்து வைத்திருந்தது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றும் அமலா ஆகியோரைத்தான். பின்னர் நடந்த சில காரணங்களால் சிவாஜி கணேசன் மற்றும் அமலா ஆகியோர் நீக்கப்பட்டு, சரண்யா ஹீரோயினாக நடித்தார். பின்னர் சிவாஜிக்காக உருவாக்கப்பட்ட பகுதி அனைத்தும் திருத்தி அமைக்கப்பட்டு கமல் மட்டுமே வேலு நாயக்கராக நாயகனில் ஜொலித்தார்.

அதன் பின்னர் தேவர் மகன் படத்தில் சிவாஜிக்காகவே கமல் பெரியவர் கதாபாத்திரத்தை உருவாக்கி நடிகர் திலகத்தை இன்னும் உச்சத்தில் கொண்டு சென்றார்.