காதலுக்கு மரியாதை படத்துல ஜோதிகாவா..? அதுவும் ஏ .ஆர். ரஹ்மான் இசை இந்த விஷயம் எப்போ நடந்துச்சு தெரியுமா?

பூவே உனக்காக படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த படம் தான் காதலுக்கு மரியாதை. மலையாள இயக்குனர் பாசில் இயக்கத்தில் 1997-ல் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. விஜய், ஷாலினி, சிவகுமார், சார்லி, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்த இப்படம் மென்மையான காதல் கதையைக் கதைக்க களமாக வைத்து வெளி வந்தது. விஜய், ஷாலினி அமைதியான எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களைக் கவர்ந்தனர்.

இந்த படத்திற்கு மற்றுமொரு பக்க பலமாக இருந்தது இளையராஜாவின் இசை. இந்தப் படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடியிருப்பார். தனது மென்மையான பின்னணி இசையால் காதலை உணர்வுகளாக கடத்தியிருப்பார் இளையராஜா. இந்த திரைப்படம் 175 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

இப்படி விஜய்க்கும், ஷாலினிக்கும் திரையில் மிக பெரிய வெற்றியைத் தேடி தந்த காதலுக்கு மரியாதை படத்தில் ஜோதிகாவும் இணைந்துள்ளார் என்பது ஆச்சர்யமான தகவலை உள்ளதா? தமிழில் ஜோதிகாவுக்கு முதல் படம் அஜித் நடிப்பில் வெளியான வாலி படம் தான் அறிமுகம். இருப்பினும் காதலுக்கு மரியாதை படம் இந்தியில் எடுக்கப்பட்டது. அதில் ஹீரோயினாக நடித்தார் ஜோதிகா. ஆம். இயக்குனர் பாசில் மலையாளம் மற்றும் தமிழில் உருவாக்கிய காதலுக்கு மரியாதை படத்தை ஹிந்தியில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் Doli Saja Ke Rakhna என்ற பெயரில் 1998 இயக்கினார்.

தமிழ் மற்றும் மலையாளம் போன்றே உருவாகிய இந்த படத்தில் ஹீரோவாக அக்சய் கண்ணா நடித்திருந்தார். ஹீரோயினாக ஜோதிகா நடித்திருந்தார். ஜோதிகாவிற்கு இது முதல் படமாக அவரது திரை வாழ்க்கையில் அமைந்தது. எல்லா வற்றிற்கும் மேலாக இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

தமிழைப் போலவே படம் இந்தியிலும் வெளியாகி சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. ஒளிப்பதிவு கே.வி.ஆனந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர்தான் ஜோதிகாவை எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார். அதன் பின் ஜோதிகா தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து சிம்ரனுக்கு அடுத்த மாற்று நடிகையாக விளங்கினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...