நடிகர் சங்கத் தேர்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு: திரையுலகில் பரபரப்பு

நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள நிலையில் இந்த தீர்ப்பால் நடிகர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம்…


2cdff8c01f73d02c66551aaf833bab8b

நடிகர் சங்க தேர்தல் குறித்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள நிலையில் இந்த தீர்ப்பால் நடிகர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது. விஷாலின் பாண்டவர் அணி மற்றும் கே.பாக்யராஜின் சங்கரதாஸ் அணியும் மோதிய நிலையில் இந்தத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து சற்றுமுன்னர் தீர்ப்பளித்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் புதிய தேர்தலை மூன்று மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்றும் அதற்குள் புதிய வாக்காளர் பட்டியலை தயார் செய்ய வேண்டும் என்றும் இந்த தேர்தலை கோகுல் தாஸ் என்பவர் கண்காணிப்பார் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்

மேலும் புதிய தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் பதவி ஏற்கும் வரை தற்போது உள்ள தனி அதிகாரி தனது பணியை தொடர்வார் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன