பிக் பாஸ் 8: அன்ஸிதா வெளிய போணும்.. தகுந்த காரணத்துடன் சொன்ன முத்து.. என்ன ஆச்சு?..

தமிழில் தற்போது பிக் பாஸ் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒரு பக்கம் பார்வையாளர்கள் இதனை பெரிதாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் இதுவரை வந்த தமிழ் பிக் பாஸ் சீசனிலேயே…

Muthukumaran on Anshitha

தமிழில் தற்போது பிக் பாஸ் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒரு பக்கம் பார்வையாளர்கள் இதனை பெரிதாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் இன்னொரு பக்கம் இதுவரை வந்த தமிழ் பிக் பாஸ் சீசனிலேயே இதுதான் சற்று சுமாரான சீசன் என்றும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். தொடர்ந்து சண்டைகள் நடைபெறாதது ஒரு பக்கம் இருந்தாலும் போட்டியாளர்கள் பல நேரங்களில் ஆர்வம் இல்லாமல் இருப்பதும் மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சி 11-வது வாரத்தை சமீபத்தில் கடந்திருந்த நிலையில் ரஞ்சித் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது 12 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சூழலில் இன்னும் 20 முதல் 25 நாட்கள் வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது. மேலும் இனிவரும் நாட்களில் நாமினேஷன் உள்ளிட்ட பல விஷயங்கள் மோசமான போட்டியாளர்களை வெளியேற்ற வேண்டும் என்பதை தாண்டி தங்களுக்கு நிகராக பலம் வாய்ந்த போட்டியாளர்களை வெளியேற்றுவதற்கான வழிகளை நோக்கி தான் அனைவருமே களம் இறங்குவார்கள் என தெரிகிறது.

சூடுபிடிக்கும் பிக் பாஸ் 8

அந்த வகையில் 12 து வாரம் ஆரம்பமாகியிருந்த நிலையில் அனைத்து போட்டியாளர்களும் இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்றும் பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு பிடிக்காத போட்டியாளர்களின் பெயரையும், தங்களுக்கு நிகராக நிற்கும் பலம் வாய்ந்த போட்டியாளர்களின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தனர்.

அந்த வகையில் முத்துக்குமரனும் அன்ஸிதா மற்றும் ராணவ் ஆகியோரை நாமினேட் செய்திருந்தார். அப்போது பேசிய முத்துக்குமரன், “முதலாவதாக நான் அன்ஸிதாவை சொல்வேன். அவருக்கென ஒரு பிரச்சனை வரும் போது ஒரு அன்ஸிதாவையும் மற்ற நேரங்களில் வேறொரு அன்ஸிதாவையும் பார்க்க முடிகிறது. ண்டு அன்ஸிதாவுக்கும் ஒற்றுமை இல்லாமல் வெவ்வேறு ஆளாக இருப்பதை உணர முடிகிறது.

அன்ஸிதா வெளிய போணும்..

அதே போல விவாதம் என வந்து விட்டால் தனக்கு எதிரே இருக்கும் நபர் என்ன பேச வருகிறார் என்பதை புரிந்து கொள்ளும் மனநிலையில் அன்ஸிதா இல்லை. மாறாக தான் பேசுவது மட்டுமே சரி என்றும் விவாதத்தில் ஈடுபடுகிறார். இதனால் அன்ஸிதா இந்த வீட்டில் இருந்து வெளியேற வேண்டுமென நான் நினைக்கிறேன்.

அடுத்ததாக ராணவ் எப்போதும் தனித்து தெரிய வேண்டும் என்ற நோக்கில் சில முக்கியமான நிகழ்வுகள் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் போது அவர் வேறொரு விஷயத்தை செய்கிறார். இதனால் அந்த நிகழ்வு வேறொரு பாதையை நோக்கியும் செல்கிறது. மேலும் பிக் பாஸ் விளையாட்டில் கவனம் சிதற வைக்கும் ஆளாக ராணவ் இருப்பதால் அவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டுமென நினைக்கிறேன்” என முத்துக்குமரன் குறிப்பிட்டுள்ளார்.