சினிமாவில் பல்துறை வித்தகராக விளங்கி வருபவர் கங்கை அமரன். இசை, இயக்கம், பாடல், வசனம், கதை என அனைத்து துறைகளில் முத்திரை பதித்தவர். தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கோட் படத்திலும் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். 1980 களில் மிகவும் பிரபலமாக விளங்கியவர்.
அதன்பின் தனது அண்ணன் இளையராஜாவுடனேயே இசைக் கோர்ப்புப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இளையராஜாவின் இசைத் திறமை பற்றி கங்கை அமரன் பேட்டி ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்ணன் இளையராஜா பின்னனி இசை அமைக்கும் போது அதிக அளவிலான இசையைச் சேர்க்க மாட்டார். தேவைப்படும் இடங்களில் மட்டுமே சேர்ப்பது தான் அவரது ஸ்டைல். எம்.எஸ்.விஸ்வநாதன் மேற்கத்திய இசையில் வல்லவர். ஆனால் இளையராஜா கிளாசிக் இசையில் வல்லவர்.
ஒழுங்கா மியூசிக் பண்ணலைனா இந்தியன் 2 மாதிரி ஆகிடும்… பேச்சுவாக்கில் அனிருத்தை கலாய்த்த கங்கை அமரன்..
இதனாலேயே அவரது பின்னனி இசை கவனிக்க வைக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் பின்னனி இசைக் கோர்க்கும் போது நோட்ஸ் எழுதி விடுவார். இசைக் கலைஞர்கள் வாசிக்கும் போது சிறிய அளவிலான மாறுதலைக் கூட கண்டுபிடித்து விடுவார்.
படம் முழுக்க இசை கசகசவென்று வந்தால் அது இந்தியன் 2 படம் போல் ஆகி விடும். ஆனால் அப்படி பின்னனி இசை இருக்கக் கூடாது. உணர்ச்சிகளுக்கேற்ப இசைக்கு நோட்ஸ் எழுதுவதில் இளையராஜா கெட்டிக்காரர் என்று கூறியிருக்கிறார்.
ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தில் அனிருத் இசையை பலரும் விமர்சித்து வந்த வேளையில் தற்போது கங்கை அமரன் பேட்டி ஒன்றில் போகிற போக்கில் கலாய்த்திருக்கிறார். இந்தியன் முதல் பாகத்தில் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை துடிப்புடன் இருந்தது. தேச பக்தியை தூண்டுவதாக இருந்தது. ஆனால் இந்தியன் 2 படத்தில் இவை அனைத்துமே மிஸ்ஸிங் ஆனது விமர்சனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.