விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடியவுள்ளது.
பைனல்ஸை நோக்கி பயணிக்கிற இந்த கடைசி வாரத்தில் போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். பிக் பாஸும் போட்டியாளர்களுக்கு அவ்வப்போது இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறார்.

நேற்றைய நிகழ்ச்சியில் ரேஷ்மா, பாத்திமா பாபு, மீரா மிதுன் மற்றும் மோகன் வைத்யா போட்டியாளர்களைப் பார்க்க சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர். பழைய நினைவுகளை போட்டியாளர்கள் பகிர்ந்து கொண்டனர், பைனல் செல்வதால் நன்றியுரையும் நடந்து முடிஞ்சாச்சு.
இன்று வெளியாகியுள்ள ப்ரோமொவில் முகின்ராவ், பிக் பாஸ் வீட்டிற்குள் பாடல் பாடுகிறார், பாடல் என்றால் அவர் மட்டும் அல்ல, சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் மற்றும் இசைக் குழுவுடன் சேர்ந்து இசைக் கச்சேரியே நடத்துகிறார்.
