
ஐதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆளுனர் மாளிகையில் பெண்கள் நடத்தும் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் இந்த திருவிழாவில் சமீபத்தில் தெலுங்கானா ஆளுனராக பதவியேற்ற தமிழிசை செளந்திரராஜன் அவர்கள் கலந்து கொண்டார்
பெண் பத்திரிகையாளர், ஆளுனர் மாளிகை பெண் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டு முளைப்பாரிகள் வைத்து கோலாட்டம் நடனம் ஆடிய நிலையில் ஆளுனர் தமிழிசை செளந்திரராஜன் அவர்களும் அந்த பெண்களுடன் சேர்ந்து கோலாட்டம் ஆடி மகிழ்ந்தார். இந்த திருவிழா ஒருவாரம் நடைபெறவுள்ள நிலையில் நாள்தோறும் ஆளுனர் தமிழிசை அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிகிறது
தமிழ்ப்பெண்ணாக இருந்தாலும் ஆளுனர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் கலாச்சாரங்களையும் மதிக்கும் வகையில் நடந்து கொள்வதால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது