தஞ்சாவூர் மாவட்டம் ராஜமன்னார்குடியில் 1943 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் காசிக்கலாக் உடையார் மற்றும் ராமாமிர்தம் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தவர் தான் மனோரமா. இவர் 10 மாத குழந்தையாக இருந்த போது இவரின் தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்ததோடு மட்டுமல்லாமல் தனது புது மனைவியோடு சேர்ந்து கொண்டு இவரின் தாயாரையும் 10 மாத குழந்தையாக இருந்த ஆச்சி மனோரமாவையும் வீட்டை விட்டு விரட்டி அடித்து விட்டார்.
10 மாத கைக் குழந்தையுடன் ஆதரவின்றி வீட்டை விட்டு வெளியேறிய இவரின் தாயார் ராமாமிர்தம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற கிராமத்தில் சிறிய குடிசை ஒன்றில் குடி புகுந்தார். அங்கு வீட்டு வேலைகளும், பலகாரங்களும் செய்து விற்று வந்தார், வறுமையின் காரணமாக ஆச்சியின் படிப்பும் நின்று போனது.
கிராமத்தில் பெண் பிள்ளைகள் வெளியில் வருவதே பாவம் என்றும், நாடகங்களில் நடிக்க பெண்கள் கிடைக்காமல் பெண் வேஷத்தை கூட ஆண்கள் போட்டு நடிக்க வேண்டிய நிலையில் இருந்த அந்த காலத்தில் வறுமையின் காரணமாக தன் அழகான குரலில் மூலம் பின்னணி குரல் கொடுக்க சென்ற ஆச்சி தனது நான்காவது வயதில் நாடகங்களில் நடிக்கவும் தொடங்கினார்.
அன்று முதல் கோபிச்சந்தா என்று பெற்றோர்கள் வைத்த பெயர் மாறி இவர் பள்ளத்தூரில் இருந்து நடிக்க வந்த சிறுமி என்பதால் பள்ளத்தூர் பாப்பா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.
நாடகங்களில் நடித்த போது இவருடன் வில்லனாக நடித்த எஸ் எம் ராமநாதன் என்பவரிடம் நட்பு ஏற்பட்டு பின்பு அது காதலாக மாறியது. தன் அம்மாவை எதிர்த்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட ஆட்சி மனோரமா ராமநாதன் தம்பதிகளுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
பொய்யான ஜாதக காரனை நம்பிய ராமநாதன் தன் மகன் பூபதி பிறந்த சில நாட்களில் ஆச்சியைப் பிரிந்து வேறொரு பெண்ணை இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார். தன் ஒரே மகனுக்காக வாழ்ந்து வந்த ஆட்சி மனோரமா தன் வீட்டில் சில நாய்களையும் பாசமாக வளர்க்க ஆரம்பித்தார்.
பல தடைகளை தகர்த்து தனது நடிப்பின் மேல் முழு ஆர்வத்தையும் செலுத்திய ஆச்சி, அந்தமான் காதலி என்னும் நாடகத்தில் நடித்த போது அதன் இயக்குனர் சுப்பிரமணியனும், ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் சேர்ந்து கோபிச்சந்தா என்ற பள்ளத்தூர் பாப்பாவுக்கு மனோரமா என்று பெயரிட்டனர்.
1957ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த மனோரமாவின் நாடகம் ஒன்றை பார்த்து வியந்து போன கவிஞர் கண்ணதாசன் ஆச்சியின் நடிப்பை பாராட்டியதோடு தனது மாலையிட்ட மங்கை என்ற படத்தில் ஆச்சியை நாயகியாக அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவையிலும் குணசித்திர வேடங்களிலும் கொடிகட்டி பறந்த ஆச்சி இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட படங்களிலும், 5000-க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
ஆச்சி மனோரமா தென்னிந்தியாவின் முதலமைச்சரான அறிஞர் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முதல்வர் என்டி ராமராவ் என ஐந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை என்ற பெருமை ஆச்சியை மட்டுமே சாரும். தமிழக அரசின் கலை மாமணி விருது, பத்மஸ்ரீ விருது, அண்ணா விருது, என் எஸ் கே விருது, எம்ஜிஆர் விருது, ஜெயலலிதா விருது என பல விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.
மேலும் ஷூட்டிங்கின் போது பாம்பு கடித்த போதும் குதிரையிலிருந்து கீழே விழுந்த போதும் கூட அடுத்த சில நாட்களிலேயே வேலைக்கு திரும்பியவர் தன் உடலுக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் தன்னால் எந்த விதத்திலும் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று நினைக்க கூடியவர் மனோரமா.
நயன்தாராவின் மாமனார், மாமியார் ஒரு போலீஸ் அதிகாரியா? இது என்ன புதுசா இருக்கு..
எஸ் எஸ் ராஜேந்திரனையும், நடிகர் சிவாஜி கணேசனையும் தன் அண்ணனாக பார்த்த ஆச்சி 2015 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் நாள் இரவு 11 மணி அளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.