நயன்தாராவின் மாமனார், மாமியார் ஒரு போலீஸ் அதிகாரியா? இது என்ன புதுசா இருக்கு..

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் பெற்றோர்கள் இருவரும் காவல் அதிகாரியாக இருந்தவர்கள் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

விக்னேஷ் சிவனின் தாயார் திருமதி மீனாகுமாரி சென்னை வடபழனியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரின் தந்தை சிவக்கொழுந்தும் போலீஸ் அதிகாரி தான். விக்னேஷ் சிவனுக்கு ஒரு இளைய சகோதரி ஒருவரும் உள்ளார்.

தமிழ் சினிமாவின் அன்பான இயக்குனர் என்று பலராலும் பாராட்டப்படும் விக்னேஷ் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் நாள் சென்னையில் பிறந்தார். பள்ளி படிப்பை சென்னை மயிலாப்பூரில் உள்ள சயின்ஸ் சாந்தோம் பள்ளியில் படித்து முடித்த இவர் அதன் பிறகு தனது கல்லூரி படிப்பை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார்.

இவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனியாக அமர்ந்து பியானோ வாசிக்கும் பழக்கம் கொண்டவர். தனது சிறு வயது முதலே சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட விக்னேஷ் சிவன் சில குறும்படங்களை எடுத்து வெளியிட ஆசைப்பட்டார். ஆனால் அந்த குறும்படங்களை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்து அவற்றையெல்லாம் கடைசி வரை வெளியிடாமல் இருந்து விட்டார்.

2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிபி என்ற பேய் படத்தில் மிகச் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து தனது திரையுலக பயணத்தை துவங்கினார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு சிம்பு, வரலட்சுமி வைத்து போடா போடி என்ற படத்தை தானே எழுதி இயக்கியதோடு அந்த படத்தில் விக்னேஷ் சிவன் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார்.

தான் இயக்கிய போடா போடி படத்திற்காக முதல் முறையாக ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற பாடலை எழுதியதன் மூலம் விக்னேஷ் பாடல் ஆசிரியராகவும் மாறினார். இந்த படம் பெரிதாக வெற்றி பெறாததால் இவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத விக்னேஷ், நடிகர் தனுஷ் நானும் ரவுடித்தான் என்ற படத்திற்கு வாய்ப்பு கொடுத்ததாக பல மேடைகளில் கூறினார்.

நானும் ரவுடிதான் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தனுஷ் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டதன் மூலம் விக்னேஷ் சிவன் வளர்ந்து வரும் இயக்குனர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார்.

2015 ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அதன் பிறகு அது காதலாக மாறியது. நானும் ரவுடிதான் படத்தின் வெற்றியின் நினைவாக நயன்தாராவும் விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

இயக்குனராக மட்டும் இல்லாமல் விக்னேஷ் சிவன் சில பாடல்களையும் தொடர்ந்து எழுதத் தொடங்கினார். அதாரு அதாரு, செஞ்சிடாலே என்னும் பாடல்களை எழுதி மிகவும் பிரபலமடைந்தார். அஜித்தின் வலிமை படத்திற்கு நாங்கள் வேற மாதிரி எனும் பாடலை விக்னேஷ் சிவன் ஒரே நாளில் எழுதி அசத்தியிருக்கிறார். இதனால் ஆச்சரியம் அடைந்த வலிமை பட இயக்குனர் அந்த படத்தின் மற்றொரு பாடலான அம்மா பாடலையும் விக்னேஷ் சிவனையே எழுத வாய்ப்பு கொடுத்தார்.

40 ஆண்டுகால திரை வாழ்க்கை, 7 ஆண்டுகள் ரகசிய காதல் என ராஜமாதா ரம்யா கிருஷ்ணனின் குறித்த பல தகவல்கள்!

அதனை ஏற்றுக் கொண்ட விக்னேஷ் சிவன் இரண்டு பாடல்களையும் அழகாக எழுதிக் கொடுத்ததோடு அந்த பாடல்களுக்கு சம்பளமே வேண்டாம் எனக் கூறி அனைவரையும் நெகிழ செய்துவிட்டார். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஆறு ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டு மகாபலிபுரம் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

விக்னேஷ் சிவன் நான்கு படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. சமீபத்தில் வெளியான ரஜினி நடித்த ஜெயிலர் படத்திலும் அவர் ஒரு பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews