பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படம் கடந்த 1982ஆம் ஆண்டு வெளியான போது முதல் ஒரு வாரம் திரையரங்குகளில் கூட்டமே இல்லை. அதன் பின் மிகப்பெரிய அளவில் அந்த படம் வெற்றி பெற்றது. 200 நாட்கள் ஓடி சாதனை செய்தது.
ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை. இந்த படத்தின் அம்சமான திரைக்கதை மற்றும் இசைஞானி இளையராஜாவின் இசை காரணமாக தான் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்று கூறலாம்.
ஐபிஎஸ் கனவு.. ஆளுநர் மாளிகையில் வேலை.. ஏவிஎம் ராஜனின் வாழ்க்கையை திருப்பி போட்ட நிகழ்வு..!
அதேபோல் மோகனுக்கு மைக் மோகன் என்ற பெயர் அடையாளமாகப் பெற்றதே இந்த படத்தால்தான். மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் தான் முதல் முதலாக சுரேந்தர் என்பவர் மோகனுக்காக குரல் கொடுத்தார். அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் மோகனுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.
படம் வெளியான போது முதல் ஒரு வாரம் படத்திற்கு எந்தவித வரவேற்பும் இல்லை என்பதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியதும் இந்த படத்தின் உருக வைக்கும் கிளைமாக்ஸ் ரசிகர்கள் மத்தியில் பரவிய நிலையில் அதன் பிறகு மிகப்பெரிய அளவில் படத்திற்கு கூட்டம் குவிந்தது. இதனால் இந்தப் படம் 200 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
தனது தோழியின் வீட்டிற்கு வரும் பூர்ணிமா ஜெயராமன் ஒரு கவிதை எழுதும்போது அந்த கவிதை பக்கத்து வீட்டிற்கு காற்றில் பறந்து சென்றுவிடும். அந்த கவிதை அந்த வீட்டில் வாழும் மோகனின் கண்களில் பட்டு அதை அழகான பாடலாக பாடுவார். அந்த குரலை கேட்டு மயங்கும் பூர்ணிமா, மோகனின் ஏழ்மையான வாழ்க்கையை பார்த்து வருத்தப்படுவார்.
முதல் படத்தில் சம்பளம் வெறும் 10 ரூபாய்.. இன்று ரூ.65 கோடி மதிப்பு சொத்து.. யார் இந்த நடிகை..!
ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் இருக்கும் அவரை ஒரு பாடகனாக ஆக்குவதுதான் தன்னுடைய கடமை என்று முடிவு செய்வார். அவர் எடுத்த முயற்சியின் காரணமாக தொலைக்காட்சியில் பாடுவதற்கு மோகனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பிறகு அவர் மிகப்பெரிய பாடகராக மாறுகிறார். இதனை அடுத்து இருவருக்கும் காதல் வேகமாக வளர்கிறது.
இந்த காதல் திருமணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென மோகனுக்கு புற்றுநோய் என்று தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் இறந்து விடுவோம் என்று தெரிந்தவுடன், தன்னால் பூர்ணிமாவின் வாழ்க்கை கெடக்கூடாது என்பதற்காக அவரை தவிர்ப்பார்.
தன்னை புறக்கணிப்பதற்கு காரணம் தெரியாமல் பூர்ணிமா தவித்த நிலையில்தான் அவருக்கு ஒரு கட்டத்தில் உண்மை தெரிய வருகிறது. அதன்பிறகு கிளைமாக்ஸ் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தின் அற்புதமான திரைக்கதை மற்றும் இசைஞானி இளையராஜாவின் ஏழு அழகான பாடல்கள்தான் படத்தில் வெற்றிக்கு முழுமுதற் காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. முதலில் இந்த படத்தில் நடிப்பதற்கு சுரேஷ் தான் பரிசீலிக்கப்பட்டதாகவும் ஆனால் சுரேஷ் ஒரு விபத்தில் சிக்கியதால் நடிக்க முடியாத சூழ்நிலை வந்ததால் ’நெஞ்சத்தை கிள்ளாதே’ படம் மூலம் பிரபலமான மோகன் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதேபோல் அப்போது மலையாளத்தில் பிரபலமாக இருந்த பூர்ணிமா இந்த படத்தில் நடிக்க தயங்கியதாகவும் ஆனால் இந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா என்பதை அறிந்த பிறகு தான் பூர்ணிமா நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
10ஆம் வகுப்பு படிக்கும்போதே எம்ஜிஆருக்கு ஜோடி.. நடிகை லதாவின் மறுபக்கங்கள்..!
இந்த படத்தில் கவுண்டமணியின் காமெடி மிகச் சிறப்பாக இருக்கும். குறிப்பாக ஹவுஸ் ஓனராக இருக்கும் கவுண்டமணி, வாடகை தராதவர்களை திட்டுவதும், அதற்கு குடியிருப்பவர்களின் ரியாக்சனும் செம்ம காமெடியாக இருக்கும். அதிலும் ’இந்த சென்னை மாநகரத்திலேயே’ என்ற கவுண்டமணியின் வசனம் இன்றளவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.