சும்மா.. சும்மா என்னை உதைக்காத..! எம்.ஆர்.ராதாவை ஒங்கி உதைத்த எம்.என்.ராஜம்..

By John A

Published:

தமிழ் சினிமாவின் சிறந்த 10 படங்களை எடுத்துக் கொண்டால் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் இரத்தக் கண்ணீர் கண்டிப்பாக இடம்பெறும். இரத்தக் கண்ணீர் படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் எக்காலத்திற்கும் பொருந்தும் வசனங்களாக இருப்பதுதான் சிறப்பு. இரத்தக் கண்ணீர் படத்தினை சினிமாவாக எடுப்பதற்கு முன்பாக 1000 முறைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றியிருக்கிறார் எம்.ஆர்.ராதா. இதுமட்டுமன்றி இந்தப் படத்தில் நடிப்பதற்காக அந்தக் காலத்திலேயே முதன் முதலாக ரூ. 1லட்சம் சம்பளம் பெற்ற நடிகரும் எம்.ஆர்.ராதாவே.

திரையுலகில் தவிர்க்க முடியாத படமாகக் கருதப்படும் ரத்தக் கண்ணீரில் எம்.ஆர்.ராதாவுடன் காந்தா என்ற கதாபாத்திரத்தில் போட்டி போட்டு நடித்திருப்பவர் எம்.என்.ராஜம். எம்.ஆர்.ராதாவினை கொடுமைப்படுத்தும் காட்சிகளில் எம்.என்.ராஜம் நடிப்பு பெரிதும் ரசிக்க வைக்கும். அந்த அளவிற்கு காந்தா கதாபாத்திரத்தை இயல்பாகத் திரையில் கொண்டு வந்திருப்பார்.

அவங்க தான் நீலாம்பரி இன்ஸ்பிரேஷன்.. படையப்பா படம் பாத்துட்டு ஜெயலலிதா சொன்ன வார்த்தை.. ரஜினி உடைத்த சீக்ரெட்..

இப்படி எம்.என்.ராஜம் நடித்த ஒரு காட்சிதான் எம்.ஆர்.ராதாவினை எட்டி உதைப்பது. குஷ்ட நோய் வந்து எம்.ஆர்.ராதா கஷ்டப்படும் போது எம்.என்.ராஜத்தைக் காண வருவார். அப்படி வருகையில் அவரை மாடிப்படியிலிருந்து எட்டி உதைக்க வேண்டும் இதுதான் காட்சி. ஆனால் பெரிய சீனியர் நடிகரான எம்.ஆர்.ராதாவை எப்படி உதைப்பது என சங்கடத்தில் இருந்திருக்கிறார் எம்.என்.ராஜம். ஆனால் எம்.ஆர்.ராதாவோ தைரியம் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்.

முதல்முறை படமாக்கப்பட்ட போது எம்.ஆர்.ராதாவினை எட்டி உதைக்கையில் எம்.என்.ராஜம் கீழே விழுந்து விட்டாராம். அதன்பின் மறுபடியும் இந்தக் காட்சியை எடுக்க உதைக்கையில் எம்.ஆர்.ராதாவுக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. எனவே எம்.என். ராஜத்திடம், “இந்தாம்மா..! சும்மா.. சும்மா என்னை உதைக்காத.. ஒரே உதைதான் ஓகே..! என்று சொல்லிவிட்டு டேக் போக, எம்.என். ராஜம், எம்.ஆர்.ராதாவை ஓங்கி உதைக்க அவர் அப்படியே சரிந்து மாடிப்படிக்கட்டுகளிலிருந்து விழுவார். இந்தக் காட்சி அனைவருக்கும் திருப்தியாக இருந்தது. இதனை நிகழ்ச்சி ஒன்றில் எம்.என்.ராஜம் பகிர்ந்திருக்கிறார்.