எம்.ஜி.ஆரை நோக்கி திடீரென பாய்ந்த பெண்.. இதுக்குத்தான் வந்தாரா? அம்மணிக்கு அம்புட்டு பாசம் போல..

By John A

Published:

திரைப்பட நடிகர்களை நேரில் பார்க்கும் போது மக்கள் தங்கள் அன்பை பலவிதங்களில் வெளிப்படுத்துவது வழக்கம். இன்றைய காலகட்டத்தில் செல்பி எடுப்பது, ஃபேன் மீட் என டிரண்ட் மாறினாலும் அந்தக் காலகட்டங்களில் அவர்களின் அன்பைப் பரிமாற ஏதேனும் ஒரு நினைவுப் பரிசினை வழங்குவது வழக்கம். ஆனால் இதுக்கெல்லாம் விதிவிலக்கானவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பாலும், அரசியல் திறத்தாலும் கோடிக்கணக்கான தொண்டர்களையும், ரசிகர்களையும் பெற்று அசைக்க முடியாத உயரத்தில் இருந்தவர்.

இன்றும் 60-களைக் கடந்தவர்களின் கனவு நாயகன் யாரென்றால் எம்.ஜி.ஆர் தான் என்று சொல்லும் அளவிற்கு நீக்கமற நிறைந்திருப்பவர். ஒருமுறை இவர் ஒரு நாடகம் ஒன்றிக்குத் தலைமையேற்கச் செல்லும் போது பெண் ஒருவர் செய்த சம்பவத்தால் ஷாக் ஆகி இருக்கிறார் எம்.ஜி.ஆர்.

இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்னன் சினிமாவில் இயக்குனராவதற்கு முன் நாடகங்களுக்கு கதை எழுதிகொண்டிருந்தார். ஸ்ரீதேவி நாடக சபா எனும் குழுவில் இணைந்து நாடகங்களை எழுதினார். அதன்பின் சக்தி நாடக மன்றத்திற்காக ‘எழுத்தாளன்’ என்கிற நாடகத்தை எழுதினார்.

அப்போதெல்லாம் ஒரு நாடகத்திற்கு கூட்டம் இல்லையெனில் அப்போது பிரபலமாக இருக்கும் சில நடிகர்களை அழைத்து வந்து நாடகத்திற்கு தலைமை தாங்க வைப்பார்கள். எழுத்தாளன் நாடகத்திற்கு கூட்டம் இல்லை என்பதால் நம்பியாரை அழைத்து வருவோம் என யோசித்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவரின் வீட்டுக்குபோனார். அவர் போன நேரம் அங்கே எம்.ஜி.ஆரும் வந்தார்.

80-களின் காதல் கோட்டை ‘ஒரு தலைராகம்‘ ஹீரோயின் இப்போ என்ன செய்றாங்க தெரியுமா?

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வந்த விஷயத்தை நம்பியார் எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது ‘சரி நானும் ஒரு நாள் வருகிறேன்’ என எம்.ஜி.ஆர் சொல்ல கோபாலகிருஷ்ணனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சனிக்கிழமை நம்பியார் போவது, ஞாயிற்றுக்கிழமை எம்.ஜி.ஆர் போவது என முடிவு செய்யப்பட்டது. நம்பியார் போன அன்று நல்ல கூட்டம் வந்து நாடக கம்பெனிக்கு நல்ல வருமானம் வந்தது.

அடுத்தநாள் எம்.ஜி.ஆர் வருகிறார் என தெரிந்ததும் மக்களின் கூட்டம் அலைமோதியது அந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆரை அழைத்து செல்வது கடினம் என யோசித்தார் கோபாலகிருஷ்ணன். உடனே எம்.ஜி.ஆர் ‘நான் காரில் வந்தால்தானே பிரச்சனை. தலையில் தலப்பா கட்டிக்கொண்டு நடந்து வருகிறேன்’ என சொல்ல ‘உங்களை யாரேனும் அடையாளம் கண்டுபிடித்துவிட்டால் அவ்வளவுதான்’ என அதை மறுத்தார் கோபாலகிருஷ்ணன்.

ஒருவழி இருக்கிறது நாடக கொட்டகைக்கு பின்னால் ஒரு வழி இருக்கிறது. அந்த வழியாக போனால் உள்ளே போய்விடலாம் என அவர் சொல்ல எம்.ஜி.ஆரோ ‘எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை’ என சொல்ல இருவரும் அந்த வழியே நடந்தனர்.

அப்போது திடீரென 6 அடியில் ஆஜானு பாகுவான ஒரு பெண் எம்.ஜி.ஆர் கட்டி பிடித்துக் கொண்டு ‘சாமி என் ராசா. நீதான் என் புருஷன். அதானலதான் என் புருஷனயே விரட்டி விட்டேன்’ என சொல்ல எம்.ஜி.ஆர் அதிர்ச்சி அடைந்தார். கோபலகிருஷ்ணனுக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த பெண்ணை அவரால் விலக்க முடியாது.

அந்த பெண்ணிடம் ‘அம்மா இப்படி எல்லாம் செய்யக்கூடாது. என்னை விடுங்கள்’ என எம்.ஜி.ஆர் சொல்லியும் அப்பெண் கேட்கவில்லை. அடுத்து எம்.ஜி.ஆருக்கு முத்தம் கொடுக்கவும் அந்த பெண் முயற்சி செய்ய எம்.ஜி.ஆரை அவரை பிடித்து தள்ளிவிட்டு வேகமாக நாடக கொட்டகைக்கு சென்றுவிட்டார். அதன்பின் சில மணி நேரங்கள் எம்.ஜி.ஆரிடம் கோபாலகிருஷ்ணன் பேசவில்லை. நாடகமெல்லாம் முடிந்த பின் அவரை அழைத்த எம்.ஜி.ஆர் ‘என்ன கோபால்.. இன்னும் பயம் போகவில்லையா?’ என சிரித்தாராம் எம்.ஜி.ஆர்.