எம்.ஜி.ஆரிடமே தன் டகால்டி வேலையை காட்டிய சந்திரபாபு!.. அப்புறம் நடந்த கதை தெரியுமா..?

By Sathish

Published:

எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் எம்.ஆர்.ராதா சுடுவதுக்கு முன்பே சந்திரபாபு உடன் எம்.ஜி.ஆருக்குர சலசலப்பு ஏற்பட்டது. தமிழ் திரை உலகிலேயே எம்.ஜி.ஆர் தான் முதல் முதலில் மக்கள் திரைப்படத்திற்கு காசை கொட்டும் அளவிற்கு ஒரு லாபகரமான கமர்சியல் திரைப்படங்களை எடுத்தவர்.

அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர் ஒருமுறை ”நானும் சிவாஜிகணேசனும் தான் சிறந்த நடிகர்கள்” என்று சொல்லிவிட்டார். இந்நிலையில் சந்திரபாபு எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்க நினைத்து அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

இதற்கு முன் கண்ணதாசனை ”கவலையில்லா மனிதன்” என்ற படத்தின் மூலம் கவலை கொடுத்து கடனாளி ஆக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் மறக்க கடனை எல்லாம் அடைக்க எம்.ஜி.ஆர் அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பை ஒன்றை வழங்கினார். பொதுவாக சந்திரபாபு சிறந்த நடிகர் என்றாலும் அவர் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வர மாட்டார். தயாரிப்பாளர்கள் நொந்து நூலாகி விடுவார்கள்.

எம்.ஜி.ஆர் பேச்சைக் கேட்டு சந்திரபாபு நேராக எம்ஜிஆர் அண்ணன் சக்கரபாணியிடம் சென்று எம்.ஜி.ஆர் எல்லாம் அப்படி ஒன்றும் சிறந்த நடிகர் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்ல அவருடைய பழக்கங்களை எம்.ஜி.ஆர் கண்டிப்பது அவருக்கு பிடிக்கவில்லை. இப்படி ஏதேதோ காரணத்தினால் சந்திரபாபுவிற்கும் எம்.ஜி.ஆருக்கு அடிக்கடி பிரச்சையாக வெடித்தது.

அதனுடன் சேர்த்து எம்.ஜி.ஆரை பற்றி கிண்டலாக கமெண்ட் அடிக்கவும் செய்தார் இதைக் கேட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி கோபத்தில் கோப்பையை தூக்கி சந்திரபாபுவை தாக்கினார். ஒரு பெரிய கைகலப்பு ஏற்பட்டு அந்த பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. எம்.ஜி.ஆருக்கு அரசியல் செல்வாக்கு அப்போதே இருந்தது. சினிமாவில் அரசியலை பயன்படுத்துவது அப்போது எம்.ஜி.ஆரின் எதிரிகளுக்கு சுத்தமா பிடிக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் மிக பெரிய அரசியல் சக்தியாக மாறி வந்த நேரம் அது.

சந்திரபாபு தான் செலவு செய்த பணத்தை கேட்டார். அது எனக்கு ஒரு வாரம் வேலைக்கான கூலி என்று சொல்லி எம்.ஜி.ஆர் தர மறுத்தார். உண்மையில் எல்லோருக்கும் பெரிய லாபத்தை எடுத்து கொடுக்கும் மனிதர்.

பகைத்து கொள்ளாமல் இருந்தால் அவர் வாரி கொடுக்கும் காமதேனு. நஷ்டம் அடைந்தவர்கள் பெரும்பாலும் தேவையில்லாமல் எம்.ஜி.ஆரை வம்பு இழுத்து வாங்கிக் கொண்டவர்கள் தான். விஷயம் இல்லாமல் எம்.ஜி.ஆர் யாரையும் தண்டிக்க மாட்டார்.