கிளைமேக்ஸ் திருப்தி இல்லை என தியேட்டரை கொளுத்திய எம்ஜிஆர் ரசிகர்கள்!

Published:

இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கோட்பாடுடன் வாழ்ந்த எம்.ஜி.ஆர் கடைசிவரை தான் படங்களில் மது, புகை போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்தவர். தமிழக அரசியலிலும், தமிழ் சினிமாவிலும் தனக்கென தனி ஆளுமையை உருவாக்கி அதில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்தவர் எம்ஜிஆர். ஒரு நாடக நடிகர் ஆக இருந்து சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து பின்னாளில் பெரிய நாயகனாக உயர்ந்து அரசியலில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்த எம்ஜிஆருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவரது படங்கள் வெளியாகும் பொழுது ரசிகர்களுக்கு அந்த நாள் பண்டிகை நாளாகவே மாறிவிடும். அதற்கு முக்கிய காரணம் எம்ஜிஆர் படங்களில் சண்டைக் காட்சிகள் மிகச் சிறப்பாக இருக்கும் என்றாலும் கூட மக்களுக்கு தேவையான பல கருத்துக்கள் அடங்கி இருக்கும் என்பதும் ஒரு காரணம்.

ரசிகர்களான பல கோடி மக்களுக்கு முன்னோடியாக வாழ்ந்து வந்த எம் ஜி ஆர் கடைசிவரை தான் படங்களில் மது புகை போன்ற காட்சிகளை தவிர்த்து அதற்கான விழிப்புணர்வையும் கொடுத்து வந்திருந்தார். அது மட்டும் இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையையும் பின்பற்றி வந்தார். முடிந்தவரை பிறருக்கு உதவி செய்து மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்தார். இப்படி எம்ஜிஆரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். அதே சமயம் அவர் படம் ஓடிய திரையரங்கை அவரது ரசிகர்களை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.இது குறித்து முழு தகவலையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1936 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான எம்.ஜி.ஆர் தொடர்ந்து 10 வருட இடைவெளிக்கு பிறகு நாயகனாக உருவெடுத்தார். அதனை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படம் மதுரை வீரன் திரைப்படம் வெளியானது. மதுரை வீரனின் கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தை யோகானந்த் இயக்கியிருந்தார். இந்த படத்தில் எம்ஜிஆர் உடன் இணைந்து பி. பானுமதி, பத்மினி, டி.எஸ்.பாலையா , என்.எஸ்.கிருஷ்ணன் , டி.ஏ.மதுரம் என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

டாப் ஹீரோக்கள் இயக்கிய திரைப்படங்கள் ஒரு பார்வை!

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்.ஜி.ஆர் மார்கை மாறுகால் வாங்கப்பட்டு இறந்து விடுவார். இந்த படம் பெரிய வெற்றியை பெறும் என்று எண்ணிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு முதல் நாள் முதல் காட்சி பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மதுரை வீரன் தெய்வம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் வெளியான இந்த படத்தில் கடைசியில் எம்ஜிஆர் இறந்து விடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் பரமக்குடி பகுதியில் எம்.ஜி.ஆரின் ரசிகர்களை தியேட்டரை எரித்து விட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றம் எழுந்துள்ளது.

இந்த பதற்றத்தை குறைக்க படத்திலிருந்து அந்த காட்சியை நீக்க பட குழுவிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அது வரலாற்றுப் படம் அவ்வாறு செய்ய முடியாது என்பதால் படக்குழு என்ன செய்வது என்று யோசித்த பொழுது நடிகர் கிருஷ்ணன் ஒரு யோசனை கூறியுள்ளார். அதன்படி படத்திலிருந்து எம்ஜிஆர் அவர்கள் எங்கு செல்கிறார்? தெய்வமாய் இருந்து நம்மை பாதுகாக்க என்று கூறியுள்ளார். அதன் பின் பதற்றம் தணிந்து படம் திரையிடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எம்ஜிஆர் திரையில் கூட இறந்துவிடக் கூடாது என்பது அவரது ரசிகர்களின் விருப்பமாக இன்றும் உள்ளது.

மேலும் உங்களுக்காக...